Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஸ்வானை பேட்டால் துரத்தி அடிக்க முயன்ற பாபர் அசாம்.. களத்தில் ஒரே சிரிப்பலை.. நடந்தது என்ன?

லாகூர் : பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானை, பாபர் அசாம் பேட்டால் துரத்தி அடிக்க முயன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான அணி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தை பெற்று செல்லும் வாய்ப்பை நூலிழையில் இழந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகினார்.

Pakistan cricketer Babar Azam tries to hit rizwan with a bat

இதனை அடுத்து டெஸ்ட் கேப்டனாக சான் மசூத், டி20 கேப்டனாக சாகின் ஆப்ரிடியும் பதவி வகித்தனர். இந்த நிலையில் பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில் பாபர் அசாம் பேட்டிங் செய்தார். அப்போது முகமது ரிஸ்வான் விக்கெட் கீப்பிங் பணியை செய்து கொண்டிருந்தார். இந்த தருணத்தில் தான் பந்தை முஹம்மது ரிஸ்வான் பிடித்தார்.

அப்போது பந்து முடிந்துவிட்டது என நினைத்து பாபர் அசாம் கிரீசை விட்டு வெளியே செல்ல முயன்றார். அப்போது பந்தை எடுத்து பாபர் அசாம் ரிஸ்வானை ரன் அவுட் ஆக்கினார். இது குறித்து ரிஸ்வான் அவுட் கேட்க மூன்றாம் நடுவர்கள் இதனை அவுட்டா இல்லையா என்று சோதித்தனர். அப்போது இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பாபர் அசாம் திடீரென்று தனது பேட்டை எடுத்துக்கொண்டு முகமது ரிஸ்வான் அடிக்க ஓடினார்.

அப்போது பாபர் அசாமிடமிருந்து தப்பிக்க ரிஸ்வான் மைதானத்தில் ஓடினார். உன்னை அடிக்காமல் விடமாட்டேன் என்பது போல் பாபர் அசாமும் பின்தொடர்ந்து ஓட இதனை பார்த்த சக வீரர்கள் சிரித்தனர். பாபர் அசாம் இதனை நகைச்சுவைக்காக தான் செய்து உள்ளார்.

இந்த மாதிரி என்ன அவுட் ஆகிட்டியே என்று பாபர் அசாம் செய்த இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. உலகக் கோப்பையில் தோல்வியை தழுவினாலும் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்தாலும் பாபர் அசாம் இன்னும் அப்படியே குழந்தை மனதோடு தான் இருக்கிறார் என்று இந்த வீடியோ காட்டுகிறது.

Story first published: Sunday, November 26, 2023, 11:50 [IST]
Other articles published on Nov 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+