கோலியுடன் தாராளமா என்னை ஒப்பிடுங்க.. கவலையே பட மாட்டேன்.. பாபர் அசாம்

கராச்சி : கிரிக்கெட்டில் இந்திய கேப்டன் விராட் கோலி பெற்றுள்ள இடத்தை தான் பிடிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் இளம் வீரர் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேசப்படுபவர் பாகிஸ்தானின் பாபர் அசாம். ஆனால் தான் கோலியின் உயரத்தை நெருங்குவதற்கு இன்னும் சில காலம் ஆகும் என்றும் பாபர் அசாம் கூறியுள்ளார்.

தன்னை கோலியுடனோ ஸ்டீவ் ஸ்மித்துடனோ ஒப்பிட்டு பேசினால் அதனால் தான் வருத்தம் அடைய மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 சாதனைகளை தொடரும் பாபர் அசாம்

சாதனைகளை தொடரும் பாபர் அசாம்

பாகிஸ்தானின் இளம் வீரர் பாபர் அசாம் தொடர்ந்து பல சாதனைகளை புரிந்து வருகிறார். அவரின் சாதனைகளுக்காக இந்திய கேப்டன் விராட் கோலியுடன் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களால் அவர் ஒப்பிடப்படுகிறார்.

 பகலிரவு போட்டியில் 97 ரன்கள் குவிப்பு

பகலிரவு போட்டியில் 97 ரன்கள் குவிப்பு

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அடிலெய்டில் பாகிஸ்தான் அணி மோதிய பகலிரவு டெஸ்ட் போட்டியில் பாபர் அசாம் 97 ரன்களை குவித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார். இதேபோல ராவல்பிண்டியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியிலும் சதமடித்துள்ளார்.

 மனம் திறந்த அசாம்

மனம் திறந்த அசாம்

தன்னை கோலியின் ரசிகன் என்று கூறிக் கொள்ளும் பாபர் அசாம், கோலியின் தற்போதைய இடத்தை பிடிப்பதே தனது லட்சியம் என்றும் தெரிவித்துள்ளார்.

"ஒப்பீடு நியாயமானதில்லை"

இந்தியாவின் முக்கிய சாதனையாளராக கோலி உள்ளதாக தெரிவித்துள்ள பாபர் அசாம், அவருடன் தன்னை ஒப்பிடுவது சரியாக இருக்காது என்றும் கூறியுள்ளார். சாதனை வீரர்களை சாதனையை எட்டிப்பிடிக்க தான் தற்போது டெஸ்ட் போட்டிகளில் நிலையான இடத்தை பிடிக்க திட்டமிட்டு செயலாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

"கவலை கொள்ள மாட்டேன்"

விராட் கோலி மற்றம் ஸ்டீவ் ஸ்மித் போன்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டால் அதுகுறித்து தான் கவலை கொள்ள மாட்டேன் என்றும் பாபர் அசாம் குறிப்பிட்டுள்ளார்.

 மீண்டும் வராமல் சரி செய்யும் திறன்

மீண்டும் வராமல் சரி செய்யும் திறன்

தான் விளையாடிய போட்டிகளின் வீடியோக்களை திரும்ப திரும்ப பார்த்து, அதில் தான் செய்த தவறுகளை கண்காணிப்பதாகவும் அந்த தவறுகள் தன்னுடைய அடுத்தடுத்த போட்டிகளில் மீண்டும் வராமல் பார்த்துக் கொள்வதாகவும் அசாம் கூறியுள்ளார்.

 முச்சதம் அடிக்க இலக்கு

முச்சதம் அடிக்க இலக்கு

உலகெங்கிலும் சாதனைகளை புரிந்துவரும் வீரர்கள் செய்வது போல தனக்கு தானே இலக்குகளை நிர்ணயித்துக் கொள்வதாகவும், டெஸ்ட் போட்டிகளில் நிலையான இடத்தை பிடிப்பதும் முச்சதம் அடிப்பதும் தற்போதைய தனது இலக்கு என்றும் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Pakistan cricketer babar azam wish to get Kohli's position
Story first published: Tuesday, December 17, 2019, 13:43 [IST]
Other articles published on Dec 17, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X