For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் நான் தான்.. விராட் கோலியே எனக்கு பின்னாடி தான்.. பாக். வீரர் பேட்டி

கராச்சி : உலகின் சிறந்த பேட்ஸ்மேன் நான்தான் என்றும் , விராட் கோலி எல்லாம் தமக்கு பின்னால் தான் இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பேசியிருப்பது ரசிகர்களிடையே நகைச்சுவையை ஏற்படுத்தியிருக்கிறது.

சினிமாவில் நம்பர் ஒன் விஜய்யா, அஜித்தா என்று சமீபத்தில் சர்ச்சை எழுந்த நிலையில் கிரிக்கெட்டிலும் அதேபோல் சிறந்த பேட்ஸ்மேன் சச்சின், விராட் கோலி என்ற விவாதம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விராட் கோலி சச்சின் எல்லாம் பின்னாடி போங்க நான் தான் பெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்று பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் பேட்டி அளித்திருப்பது நகைச்சுவையை ஏற்படுத்தியிருக்கிறது.

விராட் கோலியின் டி20 எதிர்காலம்.. வெளிப்படையாக பேசிய ராகுல் டிராவிட்.. அட இதுதான் உண்மை காரணமா?? விராட் கோலியின் டி20 எதிர்காலம்.. வெளிப்படையாக பேசிய ராகுல் டிராவிட்.. அட இதுதான் உண்மை காரணமா??

யார் அந்த மன்சூர்

யார் அந்த மன்சூர்

அதுவும் அந்த கிரிக்கெட் வீரர் பாகிஸ்தானுக்கு விளையாடி ஆறு ஆண்டுகள் ஆகிறது என்றால் இந்த காமெடியின் உச்சத்தை பார்த்துக் கொள்ளுங்கள். பாகிஸ்தானின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் நபர் குர்ராம் மன்சூர். 36 வயதான இவர் பாகிஸ்தானுக்காக 16 டெஸ்ட், 7 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். கடைசியாக பாகிஸ்தானுக்காக 2016 ஆம் ஆண்டு விளையாடி இருக்கிறார்.

நம்பர் 1 வீரர்

நம்பர் 1 வீரர்

இந்த நிலையில்தான் தாம் நம்பர் ஒன் வீரர் என்று அவர் பேட்டி அளித்திருக்கிறார். தற்போது அவரின் சுயபுராணத்தை நாம் கேட்போம். நான் விராட் கோலியை என்னுடன் ஒப்பிட்டு பார்க்க வில்லை. ஆனால் உண்மை என்னவென்றால் 50 ஓவர் கிரிக்கெட்டில் முதல் 10 இடங்களில் யார் இருக்கிறார்களோ அதில் நான் தான் நம்பர் ஒன்னாக இருப்பேன். விராட் கோலி எல்லாம் எனக்கு பின்னாடி தான் இருக்கிறார். விராட் கோலி 6 இன்னிங்ஸில் ஒரு முறை தான் சதம் அடிக்கிறார். ஆனால் நான் 5.6 இன்னிங்ஸ்க்கு ஒரு முறை சதம் விளாசி இருக்கிறேன். இது உலக சாதனை அல்லவா ?.

24 சதங்கள்

24 சதங்கள்

கடந்த 10 ஆண்டுகளாக என்னுடைய சராசரி 53 என்ற அளவில் இருக்கிறது . அதிக சராசரி வைத்திருக்கும் வீரர்களில் உலக அளவில் நான் ஐந்தாவது இடத்தில் இருக்கிறேன். பாகிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட்டில் தாம் கடைசியாக விளையாடிய 48 இன்னிங்ஸில் 24 முறை சதம் விளாசி இருக்கிறேன். 2015 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பாகிஸ்தானிற்காக யார் தொடக்க வீரர்களாக விளையாடுகிறார்களோ, அவர்களை விட நான் தான் அதிக ரன்கள் அடித்திருக்கிறேன். பாகிஸ்தானில் நடைபெறும் தேசிய டி20 தொடர்களில் நான் தான் அதிக ரன்கள் அடித்து இருக்கிறேன்.

வாய்ப்பு தரவில்லை

வாய்ப்பு தரவில்லை

இதுபோன்று ஒன்பது சாதனைகளை நான் படைத்திருந்தாலும் எனக்கு பாகிஸ்தான் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. மன்சூர் பாகிஸ்தானுக்காக கடைசியாக ஆசிய கோப்பை 2016 ஆம் ஆண்டு விளையாடினார். அதன் பிறகு அவர் அணியில் நீக்கப்பட்டாலும் தனது பேட்டிங் திறமையை நன்றாக வளர்த்துக் கொண்டு பாகிஸ்தானின் குவாயித் இ அசாம் கோப்பை மற்றும் நேஷனல் கோப்பை ஆகிய தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறார். மன்சூர் பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் 12 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார். இதில் 8000 ரன்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்ததாகும்.

Story first published: Wednesday, January 25, 2023, 14:13 [IST]
Other articles published on Jan 25, 2023
English summary
Pakistan cricketer bizzare claims that he is the no 1 batsman and kohli is behind him உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் நான் தான்.. விராட் கோலியே எனக்கு பின்னாடி தான்.. பாக். வீரர் பேட்டி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X