Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்துவாக இருப்பதில் பெருமை..!! பாகிஸ்தானில் இந்துகளுக்கு எதிராக அராஜகம்..!! டேனிஷ் கனேரியா கண்ணீர்..

கராச்சி: பெரும்பான்மையான மக்கள் இருக்கும் இடத்தில், சிறுபான்மையினருக்கு என்றுமே அச்சுறுத்தல் தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சுழற்பந்துவீச்சாளராக இருந்த டேனிஷ் கனேரியா, அணியிலிருந்து திடீரென்று நீக்கப்பட்டார்.

கவுண்டி கிரிக்கெட்டில் சூதாட்ட புகாரில் சிக்கியதால் நடவடிக்கை என்று கூறப்பட்டது. ஆனால் மதத்தால் தான் அவர் நீக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

கனேரியா குற்றச்சாட்டு

கனேரியா குற்றச்சாட்டு

இந்த நிலையில் டேனிஷ் கனேரியா சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். ஆனால் பாகிஸ்தானில் இந்துக்களின் நிலை மோசமாக உள்ளது. இந்துக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று குற்றஞ்சாட்டினார்.

இம்ரான் கானுக்கு கோரிக்கை

இம்ரான் கானுக்கு கோரிக்கை

மேலும் கராச்சி புறநகர் பகுதியில் இந்து கோயில் ஒன்று மர்ம கும்பலால் தாக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ள டேனிஷ் கனேரியா, இது போன்ற செயலை ஏற்று கொள்ள முடியாது. பாகிஸ்தானுக்கு இந்த சம்பவம் களங்கத்தை ஏற்படுத்திவிடும். உடனடியாக பிரதமர் இம்ரான் கான், இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டேனிஷ் கனேரியா வலியுறுத்தியுள்ளார்.

வலிமையான சட்டம்

வலிமையான சட்டம்

இந்து சிறுபான்மை மக்கள் தாக்கப்படுவதை தடுக்க, வலிமையான சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று டேனிஷ் கனேரியா கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தானில் எனது மதத்தை பாதுகாக்க முடிந்த அளவு நடவடிக்கை எடுப்பேன் என்றும் டேனிஷ் கனேரியா உறுதி அளித்துள்ளார்.

தடையை நீக்க வேண்டும்

தடையை நீக்க வேண்டும்

என் மீது பொய் புகார் கூறப்பட்டு எனது கிரிக்கெட் வாழ்க்கையே அது பாதித்தது. இது பற்றி தற்போதையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஷ் ராஜாவிற்கு நன்கு தெரியும். ஆனால் ஸ்பாட் பிக்சிங்கில் சிக்கிய முகமது அமீர், சல்மான் பட்க்கும் எல்லாம் வாழ்நாள் தடை நீக்கப்பட்டது. ஆனால் எனக்கு மட்டும் இதுவரை நீக்கப்படவில்லை. எனது கோரிக்கையை ரமீஷ் ராஜாவிடம் தெரிவித்துவிட்டேன். ஆனால் அவர் நிராகரித்துவிட்டார் என்றும் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்

சாதனை வீரர்

சாதனை வீரர்

பாகிஸ்தானுக்காக 61 சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடிய டேனிஷ் கனேரியா 261 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பாகிஸ்தான் வரலாற்றிலேயே அதிக விக்கெட் வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர், அதிக விக்கெட் வீழ்த்திய 4வது பந்துவீச்சாளர் என்று பெருமையை பெற்றுள்ள டேனிஷ் கனேரியா. தற்போது மதத்தால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Friday, December 24, 2021, 13:06 [IST]
Other articles published on Dec 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+