For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னை பலமுறை இஸ்லாம் மதத்திற்குகு வர சொன்னார்! சையது அஃபிரிடி மீது பாக்.வீரர் டேனிஷ் கனேரியா புகார்

நியூயார்க்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற முதல் ஹிந்து மதத்தை சார்ந்தவர் என்றால் அது டேனிஷ் கனேரியா தான். பாகிஸ்தான் அணிக்காக விளையாடி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 261 விக்கெட்டுகளை வீழ்த்திதிருந்தார். 15 முறை 5 விக்கெட்டுகளை டேனிஷ் கனேரியா கைப்பற்றி இருந்தார்.

இந்த சூழலில் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறி அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் டேனிஷ் கனேரியா இந்தியாவில் தமக்கு குடியுரிமை வழங்க பலமுறை கோரிக்கை விடுத்தார்.

Pakistan cricketer Danish kaneria

அதன் பிறகு தற்போது அவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அமெரிக்காவில் தற்போது பாகிஸ்தானில் மத சிறுபான்மையினர்கள் சந்தித்த கஷ்டங்கள் குறித்து கருத்தரங்க நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற டேனிஸ் கனேரியா, பாகிஸ்தான் அணிக்காக விளையாடும் தாம் பல கஷ்டங்களை சந்தித்ததாக கூறினார்.

இது குறித்து பேசிய அவர், "பாகிஸ்தானில் நாம் எந்த மாதிரி கஷ்டங்களை சந்தித்தோம். நம்மை எப்படி சிலர் நடத்தினார்கள் என்பது குறித்து பேச தான் நாம் அனைவரும் இங்கு கூடி இருக்கின்றோம். நம்முடைய குரல் கேட்கப்பட வேண்டும். நாம் இதுபோன்ற செயல்களுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். பாகிஸ்தான் அணிக்காக விளையாடும் நானும் பல கஷ்டங்களை வேறுபாடுகளை சந்தித்தேன்."

"பாகிஸ்தான் அணியில் எனக்கு உரிய மரியாதை கொஞ்சம் கூட கிடைக்கப்படவில்லை. காரணம் நான் வேறு மதத்தை சார்ந்தவன் என்பதால் தான். தற்போது நான் அமெரிக்காவில் வசித்து வருகின்றேன். பாகிஸ்தானில் நாம் சந்தித்தது குறித்த விழிப்புணர்வை அமெரிக்காவில் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் இது போல் ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்."

"நான் பாகிஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய அணி கேப்டன் இன்சாமம் உல் ஹக் எனக்கு முழு ஆதரவை தந்தார். என்னிடம் சரியாக நடந்து கொண்ட ஒரே கேப்டன் என்றால் அது இன்சாமம் தான். இதே போல் சோயிப் அக்தரும் எனக்கு உறுதுணையாக இருந்தார். ஆனால் சையது அப்ரிடி உள்ளிட்ட மற்ற பாகிஸ்தான் வீரர்கள் எனக்கு எப்போதுமே தொந்தரவுகளை வழங்கி வந்தார்கள்."

"என்னுடன் இணைந்து உணவு அருந்த மாட்டார்கள். குறிப்பாக சையது அஃப்ரிடி என்னை பலமுறை இஸ்லாம் மதத்திற்கு மதமாற சொல்லி வற்புறுத்தினார். ஆனால் இன்சாமம் என்னிடம் அப்படி ஒரு முறை கூட பேசியது கிடையாது" என்று டேனிஸ் கனேரியா தெரிவித்துள்ளார். கனேரியாவின் இந்த குற்றச்சாட்டை அஃப்ரிடி பலமுறை மறுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, March 13, 2025, 19:31 [IST]
Other articles published on Mar 13, 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+