For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிசிசிஐயை எல்லாம் உங்களால் ஒன்னும் பண்ண முடியாது.. ஜெய்ஷாவுக்கு ஆதரவாக பேசிய பாகிஸ்தான் வீரர் ?

லாகூர் : பிசிசிஐ யை மீறி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று அந்நாட்டு கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்தியா பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்ல முடியாத காரணத்தால், தொடர் வேறு நாட்டுக்கு மாற்றப்படும் என்று ஜெயிஷா கூறியுள்ளார்.

மாற்ற முடியும்

மாற்ற முடியும்

இந்த நிலையில் ஆசிய கோப்பை பாகிஸ்தான் நாட்டிலிருந்து மாற்றப்பட்டால் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்காது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா, பிசிசிஐ நினைத்தால் ஆசிய கோப்பையை வேறு நாட்டுக்கு மாற்ற முடியும்.

பணக்கார வாரியம்

பணக்கார வாரியம்

இதற்கு பாகிஸ்தான் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்க முடியாது. ஏனென்றால் உலகத்தில் உள்ள பணக்கார கிரிக்கெட் வாரியம் என்றால் அது பிசிசிஐ தான். இதனால் பிசிசிஐ எடுக்கும் நடவடிக்கைக்கு அனைத்து நாட்டின் கிரிக்கெட் வாரியங்களும் ஒப்புதல் அளிக்கும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகள் எல்லாம் பிசிசிஐயை நம்பி மட்டும்தான் உள்ளது.

பலவீனான வாரியம் பாகிஸ்தான்

பலவீனான வாரியம் பாகிஸ்தான்

பிசிசிஐ இல்லாமல் மற்ற கிரிக்கெட் வாரியங்கள் இல்லை. இந்திய கிரிக்கெட் வாரியத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால் அது மிகவும் சக்தி வாய்ந்தது. ஆனால் பாகிஸ்தான் அப்படி கிடையாது, அது பலவீனமான கிரிக்கெட் வாரியம். இதனால் பி சி சி ஐ என்ன சொல்கிறதோ, அதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டு தான் ஆக வேண்டும். இதில் வருத்தப்படுவதற்கு எதுவும் இல்லை .ஏனெனில் இரு நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் அப்படி இருக்கிறது என்று டேனிஷ் கனேரியா கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு சாதகம்

இந்தியாவுக்கு சாதகம்

ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானில் இருந்து மாற்றுவதற்கு அந்நாட்டு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் டேனிஸ் கனேரியாவின் இந்த பேச்சு இந்தியாவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. டேனிஷ் கனேரியா சொன்னதில் எவ்வித தவறும் இல்லை. ஆனாலும் பாகிஸ்தான் நாட்டுக்கு ஆஸ்திரேலியா ,நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த நிலையில் இந்தியா பின்வாங்குவது மற்ற நாடுகளில் எரிச்சல் செய்யும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Story first published: Thursday, October 20, 2022, 15:02 [IST]
Other articles published on Oct 20, 2022
English summary
Pakistan cricketer Danish kaneria feels PCB is very weak to fight against BCCI
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+