Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மெக்காவில் துப்புரவு பணி செய்யும் பாக். கிரிக்கெட் வீரர் ரிஸ்வான்.. ஹஜ் பயணத்தில் நடந்த நெகிழ்ச்சி

மெக்கா: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வான் தற்போது ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு உள்ளார். இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் கடைசி கடமை ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது ஆகும்.

தற்போது பக்ரீத் பண்டிகை இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கிறது. இந்த தருணத்தில் உலகம் முழுவதும் இருந்து இஸ்லாமியர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வார்கள்.

Pakistan cricketer Mohammed rizwan cleaning floors in Mecca

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான் தற்போது ஹஜ் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். ரிஸ்வான் எப்போதுமே பக்தி,வணக்க வழிபாடுகளில் மிகவும் ஆர்வம் கொண்டுவராக இருக்கிறார். 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை போட்டியின் போது மைதானத்திற்கு நடுவில் தொழுகை நடத்தினார். பிறகு அமெரிக்காவில் எங்கோ சென்று கொண்டிருந்த போது திடீரென்று காரில் நிறுத்தி பிளாட்பாரத்தில் தொழுகையை நடத்தினார்.

பாகிஸ்தான் வெற்றி பெற்றால் கூட அது கடவுளின் கிருபை என்று கூறும் அளவிற்கு முஹம்மது ரிஸ்வான் கடவுள் நம்பிக்கை கொண்டவர். இந்த நிலையில் ஹஜ் பயணம் செய்துள்ள முஹம்மது ரிஸ்வான் பள்ளிவாசல் தரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இதற்காக 24 மணி நேரமும் பணியாளர்கள் மெக்காவில் உள்ள பள்ளிவாசலை சுத்தம் செய்வார்கள். இந்த நிலையில் ரிஸ்வான் அங்கு சென்ற போது பணியாளர்களிடமிருந்து பொருட்களை வாங்கி அவர் தரையை சுத்தம் செய்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. பெயர் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராக இருந்தும் முகமது ரிஸ்வான் துப்புரவு பணியை மெக்காவில் செய்வது அவருடைய மனதை காட்டுவதாக பலரும் முஹம்மது ரிஸ்வானை பாராட்டி இருக்கிறார்கள். தற்போது பாகிஸ்தான அணி எந்த கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வில் இருக்கிறது. அடுத்தது இலங்கைக்கு எதிராக டெஸ்ட் தொடரில் அவர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, June 24, 2023, 14:13 [IST]
Other articles published on Jun 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+