Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒற்றை காலுடன் விளையாடிய ரிஸ்வான்.. சிக்சர் அடித்து வலியால் துடிப்பு.. ஓடோடி உதவி செய்த இலங்கை வீரர்

ஐதராபாத் : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் வலியால் துடித்த நிலையிலும் சதம் அடித்து அணிக்காக உதவிய சம்பவம் அந்நாட்டு ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.

ஐதராபாத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

Pakistan cricketer Mohammed rizwan hits a century with injured leg vs SL

தொடக்க வீரர் நிஷாங்கா 51 ரன்கள் எடுத்தார். மெண்டிஸ் மற்றும் சமர விக்ரமா ஆகியோர் அபாரமாக விளையாடி இருவரும் சதம் விளாசினர். இதன் மூலம் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 344 ரன்களுக்கு 9 விக்கெட் எடுத்தது. இதனை அடுத்து 345 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் இமாம் உல் ஹக் 12 ரன்களிலும் பாபர் அசாம் 10 ரன்களிலும் ஆட்டம் இழ்ந்த்து.முகமது ரிஸ்வான் மற்றும் அப்துல்லா சபிக் ஜோடி பாகிஸ்தான் அணியை சர்வில் இருந்து மீட்டது.

இதில் முகமது ரிஸ்வான் அபாரமாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் 89 ரன்கள் எடுத்திருந்தபோது அவருக்கு காலில் தசை பிடிப்பு ஏற்பட்டது. இதனால் வலியில் துடித்தார். இதனை பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து விளையாடினார். அப்போது வெல்லாலகே பந்தில் சிக்ஸர் ஒன்றை முஹமது ரிஸ்வான் அடித்தார். அப்போது முற்றிலுமாக அவர் காலில் வலி ஏற்பட்டதால் படுத்து உருண்டு வலியால் ரிஸ்வான் துடித்தார்.

இதனை அடுத்து இலங்கை வீரர் குசல் மெண்டிஸ் உடனே முஹம்மது ரிஸ்வான் காலை பிடித்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். இதன் பிறகு பாகிஸ்தான் மருத்துவ குழு முகமது ரிஸ்வானுக்கு சிகிச்சை அளித்தது. ஆனால் அப்போது வந்த நடுவர்கள் ஏற்கனவே ஆட்டம் தாமதமாக நடைபெற்று வருவதால் முஹம்மது ரிஸ்வான் பேட்டிங் செய்ய முடியவில்லை என்றால் அவரை பெவிலியனுக்கு செல்ல சொல்லுங்கள் என்று கூறினார்.

எனினும் அதனை கேட்காத முஹமது ரிஸ்வான் வலியை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அபாரமாக விளையாடி சதம் அடித்தார். முகமது ரிஸ்வான் ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முக்கியமான போட்டியில் பங்கேற்பதற்காக உடனடியாக மைதானத்திற்கு வந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, October 10, 2023, 22:38 [IST]
Other articles published on Oct 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+