Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாக். வீரர் முகமது ரிஸ்வானுக்கு தடை விதிக்க வாய்ப்பு.. ஒரே பேட்டியால் சர்ச்சை.. பாய்ந்த புகார்

கராச்சி : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான் அளித்துள்ள பேட்டி ஒன்று தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சிறப்பாக பேட்டிங் செய்யும் இரண்டு வீரர்களில் ஒருவர் பாபர் அசாம் மற்றொருவர் முகமது ரிஸ்வான்.

இரு வீரர்களை நம்பி தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியே இருக்கிறது. 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இந்திய அணியை பாகிஸ்தான் முதல் முறையாக வீழ்த்தி சாதனை படைத்தது.

முக்கியத்துவமானது

முக்கியத்துவமானது

இது குறித்து பேட்டி அளித்த முகமது ரிஸ்வான் கூறிய கருத்து தான் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. டி20 உலக கோப்பையில் இந்தியாவை நாங்கள் வீழ்த்திய பிறகு அதை நான் சாதாரண ஒரு போட்டியாக தான் எண்ணினேன். அந்த ஆட்டத்தில் நாங்கள் சுலபமாக இந்தியாவை வீழ்த்தினோம். ஆனால் பாகிஸ்தான் மக்களுக்கு அந்த போட்டி எவ்வளவு பெரிய முக்கியம் வாய்ந்தது என்று பாகிஸ்தான் வந்த பிறகு தான் தெரிந்தது.

எல்லாமே இலவசம்

எல்லாமே இலவசம்

நான் எந்த கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கினாலும் அங்கு இருப்பவர்கள் என்னிடம் காசு வாங்கவே மாட்டார்கள். அனைவரும் சொல்வார்கள், நீங்கள் செல்லுங்கள் உங்களிடம் நாங்கள் பைசா வாங்க மாட்டோம் என்று கூறுவார்கள். கடைக்காரர்கள் நீங்கள் எதை எடுத்தாலும் உங்களுக்கு இலவசம்தான் என்று சொல்வார்கள். அந்தப் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்ற பிறகு பாகிஸ்தான் மக்கள் கொடுத்த அன்பாக நான் இதைப் பார்க்கிறேன் என்று அவர் கூறினார்.

ஐசிசி விதி என்ன?

ஐசிசி விதி என்ன?

முஹம்மது ரிஸ்வானின் இந்த பேட்டி ஐசிசி விதிகளுக்கு எதிரானது ஆகும். அதாவது ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவு விதியின் படி, யாரேனும் ஒருவர் கிரிக்கெட் வீரர்களுக்கு இலவசமாக பொருட்களை கொடுத்தாலும், இல்லை கொடுக்க முயன்றாலும் அதை வாங்க கூடாது. மேலும் அப்படி இலவசமாக பொருட்களை கொடுத்த நபர் குறித்து ஐசிசி யிடமோ அல்லது அந்தந்த நாட்டு கிரிக்கெட் நிர்வாகிகளிடமோ புகார் அளிக்க வேண்டும்.

தடை விதிக்க வாய்ப்பு

தடை விதிக்க வாய்ப்பு

அப்படி இல்லை எனில் அந்த நபரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஆனால் பொருட்களை இலவசமாக வாங்கியதாக ரிஸ்வான் ஒப்புக் கொண்டுள்ள நிலையில் அவர் மீது ஐ சி சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.பாகிஸ்தான் கிரிக்கெட்டில் எப்போதுமே சூதாட்டம் புகார்கள் என்று பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ரிஸ்வானின் இந்த கருத்து மேலோட்டமாக சாதாரணமாக தெரிந்தாலும், அது ஐசிசி விதிகளின்படி தவறு என்பதால் இது பெரிய விவகாரமாக வெடிக்க வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Thursday, December 15, 2022, 18:21 [IST]
Other articles published on Dec 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+