Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போட்டியில் பங்கேற்க ஹெலிகாப்டரில் வந்த பாக். வீரர்.. யாரும் எதிர்பார்க்காத எண்டரி.. என்ன காரணம்?

சட்டோகிராம் : வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான் ஹெலிகாப்டரில் வந்து இறஙகிய சம்பவம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளது.

டி20 கிரிக்கெட்டின் புதிய பிராட்மேன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் முகமது ரிஸ்வான். 2021ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்து உலகின் முதல் தரவரிசை வீரராக இருந்தார்.

மேலும் கடந்த ஆண்டிலும் ஆயிரம் ரன்கள் அருகே வந்த ரிஸ்வான் தரவரிசையில் 2வது இடத்தை பிடித்துள்ளார். களத்தில் எப்போதும் 100 சதவீதம் கொடுக்கும் ரிஸ்வான், இது வரை எந்த சர்ச்சையிலும் சிக்காதவர்.

தொடரும் தோல்வி

தொடரும் தோல்வி

இந்த நிலையில் தான் வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் கோமில்லா விக்டோரியன்ஸ் அணிக்காக முகமது ரிஸ்வான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். நடப்பு தொடரில் கோமில்லா விக்டோரியன்ஸ் விளையாடிய 2 போட்டியிலும் தோல்வியை தழுவி கடைசி இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் ரிஸ்வான்

பாகிஸ்தான் ரிஸ்வான்

இதனால் எஞ்சிய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணியால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். இந்த நிலையில், முகமது ரிஸ்வான் நேற்று வரை பாகிஸ்தான் அணிக்காக விளையாடி கொண்டு இருந்தார். நியுசிலாந்தக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் கூட 77 ரன்கள் சேர்த்தார்.

ஹெலிகாப்டரில் பயணம்

ஹெலிகாப்டரில் பயணம்

எனினும் அந்த போட்டியில் பாகிஸ்தான் தோல்வியை தழுவிய நிலையில், அதிகாலையில் முகது ரிஸ்வான் பாகிஸ்தானில் இருந்து விமானம் மூலம் வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு வந்தார். போட்டி மதியம் நடைபெறுகிறது என்பதால் சாலை மார்க்கமாக சென்றால் பங்கேற்க முடியாது என்பதால் கோமில்லா விக்டோரியன்ஸ் அணி, ஹெலிகாப்டர் மூலம் அவரை அழைத்து சென்றது.

அவசர பயணம்

அவசர பயணம்

இதனையடுத்து போட்டி நடைபெறம் மைதானத்திற்கு சுமார் ஒரு மணி நேரம் முன்பு தான் ரிஸ்வான் வந்தடைந்தார். இதனையடுத்து, உடனயாக போட்டிக்கு தயாராகிய ரிஸ்வான், அந்த ஆட்டத்தில் 11 பந்தில் 18 ரன்கள் தான் எடுத்தார். ஹெலிகாப்டரில் அழைத்து வந்ததற்காக 2 சிக்சர்கள் அடித்திருப்பார். எனினும் கோமில்லா அணி ஹாட்ரிக் தோல்வியை தழுவியது.

Story first published: Saturday, January 14, 2023, 19:36 [IST]
Other articles published on Jan 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+