கொழும்பு : பாகிஸ்தான் அணியின் நட்சத்திர இளம் வேகப்பந்துவீச்சாளர் நசிம் ஷா கடந்த 2023 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் தொடர்ந்து மூன்று முறை நடுவர் அவுட் வழங்கியும், அவர் விக்கெட் எடுக்காமல் போன சம்பவம் நடந்தேறியது. இது குறித்து தற்போது பார்க்கலாம்.
கடந்த 2023 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் அந்த அணி வெற்றி பெற்றது.

இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 166 ரன்கள் ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷபிக் இரட்டை சதம் அடிக்க ஆகார் சல்மான் சதம் விளாசினார். இதனால் அந்த அணி 576 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து இலங்கை அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது. இதில் இலங்கை அணி 99 ரன்னுக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. அப்போது பாகிஸ்தான் அணியின் இளம் பந்துவீச்சாளர் நஷீம் ஷா விக்கெட் எடுக்க கடுமையாக போராடி வந்தார். ஆனால் அவருக்கு அதிர்ஷ்டம் கொஞ்சம் கூட இல்லை.

முதலில் ஆட்டத்தின் 53வது ஓவரில் மேத்யூஸ் விக்கெட்டை எல்பிடபிள்யூ முறையில் எடுத்ததாக நஸீம்சா நினைத்தார். அவருக்கு நடுவரும் அவுட் வழங்க, மேத்யூஸ் எடுத்த டிஆரெஸில் அது நாட் அவுட் என தெரிய வந்தது. இதனை அடுத்து மிகப்பெரிய காமெடி 62 வது ஓவரில் தான் நடைபெற்றது. இலங்கை வீரர் ரமேஷ் மெண்டீஸ் பேட்டிங் செய்த போது 61வது புள்ளி 2வது பந்தில் நசிம்சா விக்கெட் எடுத்ததாக நினைக்க நடுவர் அவுட் வழங்கவில்லை.
இதனை அடுத்து பாகிஸ்தான் டிஆர்எஸ் முறையை பயன்படுத்தியது. அப்போது பந்து ஸ்டெம்பை மிஸ் செய்தது தெரிய வந்தது. இதனால் இது அவுட் இல்லை என நடுவர் அறிவித்து விட்டார்கள். இதை தொடர்ந்து 61.3 வது பந்தில் மீண்டும் நசீம் சா வீசிய பந்து ரமேஷ் மெண்டிஸ் காலில் பட்டது. இதற்கு நடுவர் அவுட் வழங்கினார். ஆனால் பேட்ஸ்மேன் இம்முறை ரிவ்யூ பயன்படுத்த மீண்டும் அது ஸ்டெம்பை மிஸ் செய்ததாக தெரிந்தது.

இதனை தொடர்ந்து அடுத்த பந்தில் மீண்டும் பந்து ரமேஷ் மெண்டீஸ் காலில் பட அதற்கு மீண்டும் நடுவர் அவுட் வழங்கினார். இதனை அடுத்து ரமேஷ் மெண்டீஸ் மீண்டும் ரிவ்யூ செய்ய அது ஸ்டெம்பை மிஸ் செய்தது. இதனால் நஷீம் ஷா விரக்தியின் உச்சத்திற்கு சென்று அப்படியே மைதானத்தில் படுத்து தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தினார்.