Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2011 உலககோப்பையை நாங்கள் வென்று இருப்போம்.. சச்சின் நாட் அவுட் என ICC ஏமாற்றியது.. அஜ்மல் புகார்

லாகூர் : 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் ஐசிசியின் உதவியால் தான் இந்தியா வெற்றி பெற்றதாக மறைமுகமாக குற்றம் சாட்டியிருக்கிறார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளர் சையது அஜ்மல்.

இந்தியாவும் பாகிஸ்தானும் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் பலப் பரீட்சை நடத்தியது. இதில் ஆட்டத்தில் 11 வது ஓவரின் சையது அஜ்மல் வீசிய பந்தில் சச்சின் டெண்டுல்கர் எல் பி டபிள்யு ஆனார்.

Pakistan cricketer saeed ajmal speech created controversy on 2011 wc sachin dismssal

இதனை எடுத்து சச்சின் டெண்டுல்கர் ரிவ்யூ செய்ய அது ரீப்ளேவில் நாட் அவுட் என தெரிந்தது. எனினும் இந்த முடிவு அப்போது சர்ச்சை ஏற்படுத்தியது. இது குறித்து தற்போது 12 ஆண்டுகள் கழித்து சையது அஜ்மல் பேசியிருக்கிறார். இதில் என்னுடைய பந்து ஸ்டெம்பில் படாமல் திரும்பியது போல் தொலைக்காட்சியில் எப்படி காட்டினார்கள் என்று எனக்கு இன்னுமே தெரியவில்லை.

ஏனென்றால் நான் பந்தை நேராக செல்வது போல் தான் வீசினேன். 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இந்த சம்பவம் நடைபெற்றது. சச்சின் டெண்டுல்கர் தொடர்புடைய அந்த எல் பி டபிள்யூ முடிவு அறிவிக்கப்பட்டது. இது இன்னும் சர்ச்சை தான் ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் அது அவுட் நடுவருக்கும் எனக்கும் இது அவுட் என கண்டிப்பாக தெரியும்.ஆனால் வேண்டுமென்றே தொலைக்காட்சி ரிப்ளேவில் இரண்டு பிரேம்களை நறுக்கிவிட்டு வந்து ஸ்டெம்பை மிஸ் செய்வது போல் காட்டிவிட்டார்கள்.

இல்லையென்றால் நிச்சயமாக அது ஸ்டம்பிங் நடுவில் தான் பட்டு இருக்கும். அந்த முடிவு போட்டியை தலையில் மாற்றியது என சகித் அஜ்மல் குற்றச்சாட்டு இருக்கிறார். அந்த அரை இறுதி ஆட்டத்தில் மற்ற இந்திய வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் வெளியேற டெண்டுல்கர் மட்டும் 85 ரன்கள் குவித்தார். இதன் மூலம் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இலங்கையை வீழ்த்தியது. இந்த சம்பவம் முடிந்து 12 ஆண்டுகளாகியும் சையது அஜ்மல் இன்னும் அதை பேசி சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறார்.

Story first published: Sunday, July 2, 2023, 16:29 [IST]
Other articles published on Jul 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+