Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோல்வியால் தூக்கம் போச்சு.. பிரஸ் மீட்டில் புலம்பிய பாக். வீரர்.. அரையிறுதிக்கு வருவோம் என பேச்சு

மெல்போர்ன் : டி20 உலக கோப்பையில் இரண்டு தோல்விகளை தழுவியதால் தங்களுடைய தூக்கத்தை இழந்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷான் மசூத் தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் லீக் சுற்று ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது.

இதில் குரூப் ஒன்றிலிருந்து நியூசிலாந்தும், இங்கிலாந்து அணியும் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

அரையிறுதி வாய்ப்பு

அரையிறுதி வாய்ப்பு

குரூப் 2 வின் இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் தங்களது கடைசியில் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரை இறுதி சுற்கு சென்று விடும். பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை தற்போது பட்டியலில் 3வது இடத்தில் 4 புள்ளிகளுடன் உள்ளது. இந்திய அணி கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வே உடன் தோற்றால் பாகிஸ்தான அணி 6 புள்ளிகளை பெரும் பட்சத்தில் அந்த அணி அரையிறுதி சுற்றுக்குச் செல்ல முடியும்.

நம்பிக்கை இருக்கு

நம்பிக்கை இருக்கு

ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷான் மசூத், நாங்கள் தொடரில் தோல்வி அடைந்த தருணம் எங்களுடைய அரையிறுதி வாய்ப்பை வெகுவாக பாதித்துள்ளது. அதனால் தான் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தை நாங்கள் பிடிக்கவில்லை. எனினும் இன்னும் எங்கள் நம்பிக்கையை நாங்கள் இழக்கவில்லை.

தூக்கத்தை இழந்தனர்

தூக்கத்தை இழந்தனர்

வாழ்க்கை நமக்கு கடினமான பாடத்தை கற்றுக் கொடுக்கும். அதில் இதுவும் ஒன்று. இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான போட்டியில் நாங்கள் அடைந்த தோல்வியின் மூலம் எங்கள் அணி வீரர்கள் தூக்கத்தை இழந்தனர். அவர்களுடைய உத்வேகம் மற்றும் நம்பிக்கை பாதிக்கப்பட்டது. ஆனால் அதிலிருந்து மீண்ட விதம் எங்களுடைய குணத்தை காட்டுகிறது.

பாடம் கற்றோம்

பாடம் கற்றோம்

இதுதான் உண்மையிலேயே பெரிய விஷயம். தோல்வியில் இருந்து மீண்டு வரும்போது தான் நாம் நமது தவறுகளில் இருந்து பாடம் கற்க முடியும். எங்களுடைய அணியின் தன்மையை பார்த்தீர்கள் என்றாலே உங்களுக்குத் தெரியும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு நாங்கள் சரியாக செயல்பட்டு இருக்கிறோம்.

நம்பிக்கை இருக்கிறது

நம்பிக்கை இருக்கிறது

இப்போது அணியில் அனைவரும் நல்ல மனநிலையில் இருக்கின்றனர். தென்னாப்பிரிக்கா அணி அபாரமாக செயல்பட்டாலும் நாங்கள் சிறப்பாக கையாண்டு அந்த அணியை வீழ்த்தினோம். தற்போது எங்களுடைய கவனம் எல்லாம் வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு புள்ளிகளை பெற வேண்டும். அது மட்டும் தான் எங்கள் கையில் இருக்கிறது. எங்கள் குரூப்பில் கடைசி பந்து முடியும் வரை நாங்கள் நம்பிக்கையோடு இருப்போம் என்று ஷான் மசூத் கூறியுள்ளார்.

Story first published: Saturday, November 5, 2022, 20:10 [IST]
Other articles published on Nov 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+