Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி 110 சதம் அடிப்பார்.. உங்கள நீங்களே அசிங்கப்படுத்தக்காதீங்க.. சச்சின் பற்றி பேசிய சோயிப் அக்தர்

மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 110 சதம் அடிப்பார் என்று நம்புவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி கடந்த சில காலமாக பெரிய ரன்களை அடிக்காமல் ஆட்டமிழந்து வருகிறார். இது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சோயிப் அக்தர், விராட் கோலி தான் அனைத்து காலத்திலும் சிறந்த வீரர் என்று தெரிவித்துள்ளார்.

45 வயது வரை விளையாடுங்கள்

45 வயது வரை விளையாடுங்கள்

விராட் கோலிக்கு மரியாதை தாருங்கள். அவரை பற்றி குறை சொல்கிறேன் என்று உங்களை நீங்களே அசிங்கப்படுத்தி கொள்ளாதீர்கள். உங்கள் பேச்சை எல்லாம் அடுத்த தலைமுறை கேட்கிறது. ஒரு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவனாக சொல்கிறேன், விராட் கோலி தான் எப்போதும் சிறந்த வீரர். அவர் எந்த கவலையும் இன்றி 45 வயது வரை விளையாட வேண்டும்.

110 சதங்கள்

110 சதங்கள்

விராட் கோலி 110 சதங்கள் அடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். விராட் கோலி குடிறத்து தவறாக டிவிட் போடுகிறார்கள். தீபாவளி குறித்து விராட் மனைவி பேசினால், அவரது மனைவி, குழந்தை பற்றி எல்லாம் தவறாக பேசுகிறார்கள். 110 சதம் என்ற சாதனைக்கு கொண்டு செல்ல தான் விராட் கோலி தற்போது இப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

சச்சினை பாருங்கள்

சச்சினை பாருங்கள்

நான் சச்சின் டெண்டுல்கரை மிகவும் மதிக்கின்றேன். அவர் சிறந்த வீரர். எப்போதும் பணிவாக நடந்து கொள்வார். ஒருவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சச்சினிடம் தெரிந்து கொள்ளுங்கள். சச்சின் மற்றவர்களிடம் பேசும் போது எப்போதும் மரியாதையாக தான் பேசுவார். இவ்வளவு பெரிய வீரராக இருந்தும், மற்றவர்களின் மனதை காயப்படுத்தும் வகையில் ஒரு டிவிட் கூட சச்சின் போட்டது இல்லை.

Recommended Video

IPL 2022-ல் சொதப்பிய இளம் வீரர்கள்.. விளாசிய Sunil Gavaskar #Cricket
மரியாதையாக பேசுங்கள்

மரியாதையாக பேசுங்கள்

நமக்கு வயசாகி கொண்டு போகிறது. நான் இன்னும் 25 வயது வீரன் கிடையாது. இப்போது இருக்கும் வீரர்களை பார்த்து மனதில் தோன்றுவதை சொல்லலாம். ஆனால் கொஞ்சமாவது மரியாதையுடன் பேச வேண்டும் என்று சோயிப் அக்தர் கூறியுள்ளார். ஆர்சிபி தோல்வி அடைந்ததற்கு கோலி மீது பல விமர்சனம் வந்தள்ள நிலையில் அதற்கு சோயிப் அக்தர் பதிலடி தந்துள்ளார்.

Story first published: Wednesday, June 1, 2022, 8:36 [IST]
Other articles published on Jun 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+