Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்க கூட சேர கூடாதுனு எங்க அம்மா சொல்லிட்டாங்க.. தேடி வந்த பொறுப்பை மறுத்த சோயிப் அக்தர்

மும்பை: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் அதன் அரசியலில் இருந்து விலகி இருக்குமாறு தனது தாய் அறிவுறுத்தியுள்ளதாக, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை தேர்வாளராக அல்லது வேறு ஏதேனும் முக்கியப் பொறுப்பில் சோயிப் அக்தர் நியமிக்கப்படலாம் என சமூக ஊடகங்களிலும் செய்திகள் பரவி வந்தன.

இந்த நிலையில், தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் இணையப் போவதில்லை என்பதை அக்தர் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபகாலமாக சர்வதேச அரங்கில் தொடர்ந்து ஏமாற்றமளிக்கும் வகையில் விளையாடி வருவதால், கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Shoaib akthar

இது குறித்து பேசிய அக்தர், "பரவி வரும் செய்திகள் அனைத்தும் வெறும் ஊகங்கள் மட்டுமே, அதில் உண்மையில்லை. பாகிஸ்தான் அரசியல் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் இருந்து எப்போதும் விலகி இருக்குமாறு எனது தாய் எனக்கு அறிவுறுத்தியுள்ளார். நான் அவரது வார்த்தையை அப்படியே பின்பற்றப் போகிறேன்" என்று கூறினார்.

IND vs WI: மீண்டும் சதத்தை தவறவிட்ட ரோகித் சர்மா.. தனி ஆளாக போராடி அணியை காப்பாற்றிய ஹிட்மேன்

IND vs WI: மீண்டும் சதத்தை தவறவிட்ட ரோகித் சர்மா.. தனி ஆளாக போராடி அணியை காப்பாற்றிய ஹிட்மேன்

தற்போது அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டுள்ளதாகக் கூறிய அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதே நேரத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் எந்தவொரு பொறுப்பையும் தான் ஏற்கப்போவதில்லை என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்தார்."பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு சேவை செய்ய நான் விரும்புகிறேன், ஆனால் அதை வேறு பல வழிகளில் என்னால் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நினைக்கிறேன்" என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தற்போதைய நிலை குறித்தும், கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள் குறித்தும் அக்தர் எப்போதும் தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்துள்ளார். ஆனால், சமீபகாலமாக அவரது விமர்சனங்களின் வேகம் சற்று குறைந்திருந்ததால், அவர் விரைவில் கிரிக்கெட் வாரியத்தில் ஏதேனும் ஒரு முக்கியப் பொறுப்பை ஏற்கக்கூடும் என்ற விவாதங்கள் எழுந்தன.

IND vs WI: கேஎல் ராகுல் அதிரடி சதம்.. மீண்டும் இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா

Also Read

IND vs WI: கேஎல் ராகுல் அதிரடி சதம்.. மீண்டும் இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா

முன்னதாக இஸ்லாமாபாத்தில் வசிக்கும் சோயிப் அக்தர், கடந்த வாரம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வியை நேரில் சந்தித்து பாகிஸ்தான் தேசிய அணி மற்றும் வாரியத்தின் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதித்ததாகக் கூறப்பட்டது. மேலும், சில மாதங்களுக்கு முன்பு அக்தரின் மூத்த சகோதரர் காலமானபோது, மோசின் நக்வி அக்தரைத் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார். இதன் காரணமாகவே இருவருக்கும் இடையேயான உறவு அண்மைக்காலமாக சீராகியதாக கூறப்படுகிறது.

Story first published: Saturday, October 3, 2026, 19:09 [IST]
Other articles published on Oct 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+