Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய டாக்சி டிரைவருடன் இந்திய உணவகத்தில் சாப்பிட்ட பாகிஸ்தான் வீரர்கள்!

Recommended Video

இந்திய டிரைவருடன் உணவகத்தில் சாப்பிட்ட பாகிஸ்தான் வீரர்கள்!

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடருக்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்க்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

ஆனால் வர்ணனையாளர் அலிசன் மிச்செல் பகிர்ந்த பாகிஸ்தான் வீரர்கள் குறித்த நெகிழ்ச்சி சம்பவத்தின்மூலம் பாகிஸ்தான் வீரர்கள் மற்றவர்களின் இதயங்களை வென்றுள்ளனர்.

பிரிஸ்பேனில் இந்திய உணவகத்தில் உணவருந்த சென்ற ஐந்து பாகிஸ்தான் வீரர்கள், தங்களை டாக்சி மூலம் அங்கு அழைத்து சென்ற இந்திய டாக்சி டிரைவருடன் இணைந்து உணவருந்திய நிகழ்வு அனைவரையும் கவர்ந்துள்ளது.

 முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி

முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் வீரர்கள், அந்த அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றனர். இதனிடையே பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் தொடரில் இன்னிங்க்ஸ் தோல்வி மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்துள்ளது.

 இதயம் கவர்ந்த நிகழ்வு

இதயம் கவர்ந்த நிகழ்வு

இந்த போட்டியில் வர்ணனையாளர்களாக அலிசன் மிச்செல் மற்றும் மிட்செல் ஜான்சான் ஆகியோர் இருந்த நிலையில், பாகிஸ்தானின் யாசிர் ஷா, ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா உள்ளிட்ட 5 வீரர்கள் இந்திய டாக்சி டிரைவருடன் இணைந்து உணவருந்திய நிகழ்வை அலிசன் கூறியது அனைவரையும் கவர்ந்தது.

 இந்திய உணவகத்தில் உணவு

இந்திய உணவகத்தில் உணவு

டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் வீரர்கள், இந்திய உணவகத்தில் உணவு சாப்பிடுவதற்காக டாக்சி ஒன்றை புக் செய்துள்ளனர். தங்களை உணவகத்தில் இறக்கிவிட்ட டாக்சி டிரைவருக்கு அவர்கள் பணம் கொடுக்க, அவர் அதை மறுக்க, அவரை தங்களுடன் உணவருந்த அழைத்து சென்ற அவர்கள், ஒரே மேஜையில் அவருடன் உணவருந்தியுள்ளனர்.

 வர்ணனையாளரிடம் பகிர்வு

வர்ணனையாளரிடம் பகிர்வு

இந்த நிகழ்வை புகைப்படம் எடுத்து மகிழ்ந்த அந்த இந்திய டாக்சி டிரைவர், அடுத்தமுறை தன்னுடைய டாக்சியில் பயணம் செய்த வர்ணனையாளரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அவர் அதை தன்னுடைய கிரிக்கெட் வர்ணனையின் போது உடனிருந்த மிச்செல் ஜான்சனிடம் பகிர்ந்துள்ளார்.

சமூக வலைதளத்தில் வைரல்

வர்ணனையாளர் லைவ்வாக பகிர்ந்த இந்த சம்பவம் டிவிட்டரில் பதிவிடப்பட்டு, தற்போது வைரலாகியுள்ளது. ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சி குறித்து மகிழ்ச்சி தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர்.

Story first published: Tuesday, November 26, 2019, 14:12 [IST]
Other articles published on Nov 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+