Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காவி வெள்ளையாக மாறியது.. ஜெய்ஷா போட்ட உத்தரவு.. பாகிஸ்தானுக்காக மாறிய சூழல்

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் வரும் சனிக்கிழமை அகமதாபாத்தில் மோதுகிறது. இந்த போட்டிக்காக பல்வேறு ஏற்பாடுகளை பிசிசிஐ செய்திருக்கிறது.

இந்த நிலையில் அகமதாபாத்தில் பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறை இருக்கக் கூடாது என்பதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது.

Pakistan cricketers welcomed with white shawl instead of saffron to avoid controversy

மேலும் பாகிஸ்தான் அணி ஹைதராபாத்திற்கு வந்தபோது சில சர்ச்சைகள் இருந்தது. தற்போது அப்படி ஒரு எந்த சர்ச்சைக்கும் இடம் அளிக்கக்கூடாது என ஜெய்ஷா உத்தரவு போட்டு உள்ளார். குறிப்பாக ஹைதராபாத்துக்கு இந்திய அணி வந்தபோது காவி நிறத்தில் துண்டு போடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அகமதாபாத்துக்கு வந்த பாகிஸ்தான் வீரர்களுக்கு காவி நிறத்தில் துண்டு தவிர்க்கப்பட்டு வெள்ளை நிறத்தில் துண்டு போடப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் பாகிஸ்தான் வீரர்களை வரவேற்கும் விதமாக நடன நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. பொதுவாக நடப்பு பங்கேற்கும் வீரர்களுக்கு காவி உட்பட பல்வேறு நிறத்தில் துண்டுகள் போடப்பட்டு வந்தது வழக்கம். ஆனால் எவ்வித சர்ச்சைக்கு இடம் அளிக்கக்கூடாது என்பதற்காக பாகிஸ்தான் அணியின் அனைத்து வீரர்களுக்குமே வெள்ளை நிற துண்டு வழங்கப்பட்டது.

Pakistan cricketers welcomed with white shawl instead of saffron to avoid controversy

மேலும் பாகிஸ்தான் வீரர்கள் முகம் சுளிக்கும் விதமாக எதுவுமே நடக்கக்கூடாது என்று ஜெயிஷா உத்தரவு போட்டு உள்ளார். மேலும் பாகிஸ்தான் அணிக்கு ஏதேனும் குறை வந்துவிடக்கூடாது. அவ்வாறு வந்தால் அதனை பாகிஸ்தான் ஊடகங்கள் பூதாகரமாக மாற்றி விடுவார்கள். இதனால் அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது என குஜராத் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கு ஜெய்ஷா அறிவுறுத்தி இருக்கிறார்.

Pakistan cricketers welcomed with white shawl instead of saffron to avoid controversy

அதன் அடிப்படையில் ஐதராபாத்தில் என்ன குறை ஏற்பட்டதோ அதனை எல்லாம் சரி செய்யும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு எதிராக யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்பதால் அகமதாபாத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சுற்றி சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.

Story first published: Thursday, October 12, 2023, 14:15 [IST]
Other articles published on Oct 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+