Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒழுங்கா ஆடாத 2 பாகிஸ்தான் வீரர்களுக்கு சைபர் கிரைம் சம்மன்.. சிக்கும் ரிஸ்வான், இமாம்!

இஸ்லாமாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் முன்னணி வீரர்களான முகமது ரிஸ்வான் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோருக்கு அந்நாட்டின் தேசிய சைபர் கிரைம் விசாரணை முகமை அதிரடியாக சம்மன் அனுப்பியுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இவர்களது செல்போன்களில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அவர்கள் மேட்ச் பிக்ஸிங் செய்ததாக விசாரணை நடைபெறுவதாக கிரிக்கெட் உலகில் சலசலப்பு எழுந்துள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் இமாம்-உல்-ஹக் காயம் காரணமாக பேட்டிங் செய்யவில்லை; முகமது ரிஸ்வான் 2 இன்னிங்சிலும் சேர்த்து வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். இமாம் போலியாக காயம் ஏற்பட்டதாக நாடகம் ஆடியதாக சர்ச்சை எழுந்தது.

Pakistan Cyber Crime Summons Mohmamad Rizwan amp amp Imam-ul-haq After Phone Data Seized Over Match-Fixing Suspicions

அந்தப் போட்டி முடிந்த உடன் 7 பாகிஸ்தான் வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். அப்போதே ரிஸ்வான் மற்றும் இமாம் உல் ஹக்-கின் செல்போன்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகப் பறிமுதல் செய்து அதிலிருந்த தகவல்களைப் பதிவு செய்தனர்.

தொடரின் நடுவிலேயே அவர்கள் இருவரும் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்களுடன் மேலும் 5 வீரர்கள் நீக்கப்பட்டதோடு, தலைமைப் பயிற்சியாளர் சர்பராஸ் அகமது மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் உமர் குல் ஆகியோரும் அதிரடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த விவகாரம் சாதாரண ஒழுங்கு நடவடிக்கையைத் தாண்டி தற்போது சைபர் கிரைம் விசாரணை வரை சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகமது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத 3-வது கிரிக்கெட் வீரர் ஆகியோருக்கு சைபர் கிரைம் பிரிவு சம்மன் அனுப்பி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. இந்த சைபர் கிரைம் முகமை, பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இந்த அமைச்சகத்தின் அமைச்சராக இருப்பவரே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி என்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"நான் இன்னும் கமிட் ஆகல".. அகர்கரை மறைமுகமாக கலாய்த்தாரா ரோஹித் சர்மா? டி-ஷர்ட் வாசகத்தால் சூசகம்

இந்த விவகாரம் தொடர்பாக வாரியம் உள் ஒழுங்கு நடவடிக்கை விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. தோல்விக்குக் காரணம் வீரர்களின் மோசமான ஆட்டமா அல்லது வேறு ஏதேனும் விதிமீறல்களா என்ற கோணத்தில் இந்த செல்போன் தரவு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயல் வீசி வருகிறது.

Story first published: Thursday, September 10, 2026, 16:02 [IST]
Other articles published on Sep 10, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+