Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜா ஒரு மோசமான பவுலர்..தோனி தான் அவரை மாற்றினார்..சாஹல் வேஸ்ட்!பாக் முன்னாள் வீரர் சர்ச்சை கருத்து

லாகூர் : இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து அவ்வப்போது கடும் விமர்சனங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் வைத்த வருகிறார்கள்.

இது குறித்து ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாகிஸ்தான் வீரர்கள் தேவையற்ற கருத்துக்களை இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து கூறி வருவதாக கண்டனம் தெரிவித்தார்.

சமூக வலைத்தளத்தில் தங்களது வீடியோ நிறைய மக்களால் பார்க்க வேண்டும் என்பதற்காக இப்படி தேவையற்ற கருத்தை பாகிஸ்தான் வீரர்கள் பேசுவதாகவும் அவர் சாடினார் .

தலைசிறந்த பவுலர்கள்

தலைசிறந்த பவுலர்கள்

அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக தற்போது ஒரு விஷயம் நடந்துள்ளது. இந்திய நாடு பல சுழற்பந்துவீச்சு ஜாம்பவான்களை உருவாக்கியுள்ளது. உலகிலே அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் அணில் கும்பளே இருக்கிறார். இதைப் போன்று ஹர்பஜன்சிங், பிசன் சிங் பேடி , அஸ்வின் போன்ற தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் முதல் 10 இடத்தில் இருக்கிறார்கள்.

கடுமையான விமர்சனம்

கடுமையான விமர்சனம்

இதேபோன்று இந்தியாவில் சுழற் பந்துவீச்சு பலமாக இருப்பதால்தான் 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரை கூட சொந்த மண்ணில் தோற்றது கிடையாது. ஜடேஜாவும் தன்னுடைய ஆல்ரவுண்டர் திறமையால் நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார். இதன் மூலம் ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்திலும், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்திலும் இருக்கிறார். இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரஹ்மான் இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.

தோனி தான் மாற்றினார்

தோனி தான் மாற்றினார்

இதில் அவரிடம் இந்திய சுழற் பந்துவீச்சாளர்களில் யார் மிகவும் மோசமாக செயல்படக் கூடியவர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு முதலில் ஒரு நாட்டுக்காக விளையாடும் எந்த பந்துவீச்சாளரும் மோசமான வீரராக இருக்க முடியாது என்று பதிலை சிறப்பாக ஆரம்பித்து, பிறகு கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். தொடர்ந்து பேசிய அவர் ஜடேஜா ஆரம்ப காலத்தில் மிகவும் பரிதாபத்துக்குரிய மோசமான பந்துவீச்சாளராக இருந்தார். ஆனால் தோனியின் அறிவுரைப்படி மற்றும் வழிகாட்டுதலில் மாற்றிக்கொண்டு ஜடேஜா பிறகு நம்பர் ஒன் வீரராக திகழ்கிறார்.

எளிதாக ரன் அடிக்கலாம்

எளிதாக ரன் அடிக்கலாம்

இதேபோன்று சாகல் மிகவும் மோசமான பந்துவீச்சாளராக திகழ்கிறார். சாஹல் பந்து வீச்சில் எளிதாக ரன்களை சேர்க்கலாம். சாகல் பந்துவீச்சில் எந்த பலமும் இருக்காது. பந்தும் சுழன்று வராது என்று அவர் கூறினார். டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை சாகல் பெற்றுள்ள நிலையில் பாகிஸ்தான் வீரர் அப்துல் ரகுமான் இவ்வாறு கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Story first published: Tuesday, February 28, 2023, 19:02 [IST]
Other articles published on Feb 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+