
கேப்டன்ஷி வரல
குறிப்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேனிஸ் கனேரியா, ரிஷப் பண்ட் கேப்டன்ஷி குறித்து கடுமையாக சாடினார். ரிஷப் பண்ட்க்கு கேப்டன்ஷி சுத்தமாக வரவில்லை. பந்துவீச்சாளர்களை சுழற்சி முறை மாற்றுவதில் தவறு செய்தார். பவர்பிளேவில் சாஹலுக்கு பந்துவீச வாய்ப்பு கொடுத்தது தவறான முடிவு.

தவறான முடிவு
அதற்கு பதில், அவர் அக்சர் பட்டேலுக்கு கொடுத்திருக்கலாம். ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு ஓவர் மட்டும் தாக்ன வழங்கி இருக்கிறார். சாஹல் போன்ற பந்தவீச்சாளருக்கு 2 ஓவர் தான் கொடுத்திருக்கிறார். அது எனக்கு அதிர்ச்சியை தந்தது. டேவிட் மில்லர், வெண்டர் டுசன் ஜோடி பேட்டிங் செய்த போது, சாஹலுக்கு பந்துவீச சாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும்.

பவர்பிளேவில் 5 பவுலர்கள்
தென்னாப்பிரிக்கா பெரிய இலக்கை துரத்தும் சூழலில், நிச்சயம் சாஹல் விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பார். 6 ஓவர் பவர்பிளேக்கு 5 பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதை என்ன வென்று சொல்வது என்று ரிஷப் பண்ட் மீது டேனிஸ் கனேரியா விமர்சனம் செய்துள்ளார். டேனிஷ் கனேரியாவின் கருத்து 100க்கு 100 சரியே.

புவனேஸ்வர்குமார் பதிலடி
ஆனால், இது குறித்து பேசிநய புவனேஸ்வர் குமார், எங்களுடைய பந்துவீச்சு முதல் போட்டியில் மிகவும் மோசமாக இருந்தது. அதனால் தான் நாங்கள் தோற்றோம். பந்துவீச்சாளர்கள் சரியாக செயல்படவில்லை என்றால் எந்த கேப்டனாலும் எதுவும் செய்ய முடியாது. நாளைய போட்டியில் சிறப்பாக செயல்படுவோம் என நம்பிக்கை உள்ளது.


Click it and Unblock the Notifications











