சூர்யகுமாரை அவமானப்படுத்தி விட்டார்கள்.. டிராவிட், ரோகித் மீது பாக் வீரர் புகார்.. மரியாதை கொடுங்க!
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவை கேப்டன் ரோகித் சர்மாவும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் அவமானப்படுத்தி விட்டதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா குற்றம் சாட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தொடர்ந்து மூன்று முறை கோல்டன் டக் ஆகி சோகமான சாதனை ஒன்றை சூர்யகுமார் யாதவ் படைத்திருக்கிறார்.
இதன் மூலம் உலக கோப்பையில் இந்திய அணியின் நம்பர் நான்காவது வீரராக யார் விளையாடுவார் என்ற சந்தேகம் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நம்பிக்கை வைக்கவில்லை
தற்போது சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் போட்டியில் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா சூர்யகுமார் யாதவ் மீது இந்திய அணி நிர்வாகம் போதிய நம்பிக்கையை வைக்கவில்லை. பேட்டிங் வரிசையில் அவருடைய இடத்தை நீங்கள் மாற்றி இருக்கக் கூடாது. விராட் கோலி கூட ஃபார்முக்கு திரும்ப அதிக நாட்கள் எடுத்துக் கொண்டார் .

பேட்டிங் வரிசை
ஆனால் ஒருபோதும் பேட்டிங் வரிசையில் கோலியின் இடம் மாற்றப்படவில்லை. ஆனால் சூர்யகுமார் யாதவ் மட்டும் ஏன் அப்படி செய்தீர்கள்? சூர்யகுமார் யாதவ் கோல்டன் டக் எடுத்திருந்தால் அதற்கு இந்திய அணி நிர்வாகம் தான் முழு காரணம் .இது ரோகித் சர்மா செய்த பெரிய தவறு .பேட்டிங் வரிசையில் அவருடைய இடத்தை மாற்றியதன் மூலம் சூர்யகுமார் யாதவை நீங்கள் அவமானப்படுத்தி விட்டீர்கள்.

ஊக்கமளிக்க வேண்டும்
சூர்யாவின் நம்பிக்கை ஏற்கனவே குலைந்து இருக்கிறது. இந்த தருணத்தில் நீங்கள் அவரை ஊக்கமளிக்க வேண்டும். அவருடைய இடத்தில் சூரிய சூர்யகுமார் யாதவை நீங்கள் விளையாட வைத்திருக்க வேண்டும். சூர்யகுமார் யாதவ் சுழற் பந்துவீச்சை சிறப்பாக எதிர் கொண்டு விளையாடக் கூடியவர். அவரை ஏன் நீங்கள் கடைசியாக களம் இறக்குகிறீர்கள். 15 முதல் 20 ஓவர் வரை விளையாட அவருக்கு நீங்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
ஆனால் இது மிகவும் மோசமான விஷயம். ஒரு சிறந்த வீரர் ஒரு தொடரில் வெறும் மூன்றே பந்துகள் மட்டும் தான் எதிர் கொண்டிருக்கிறார்.

தவறு செய்துவிட்டார்கள்
இது போன்ற சம்பவம் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் திறமையும் ,தகுதியும் சூர்யகுமார் யாதவுக்கு எப்போதுமே இருக்கிறது. தற்போது கடினமான கட்டத்தை அவர் எதிர்கொண்டு வருகிறார். முதல் 10 ஓவரை கடந்து விட்டால் பந்து ஸ்விங் ஆவது நின்றுவிடும்.எனவே சூர்யகுமார் யாதவுக்கு எந்த சிக்கலும் ஏற்பட்டிருக்காது. ஆனால் இந்தியா அந்த தவறை செய்துவிட்டது என டேனிஷ் கனேரியா குற்றம் சாட்டி உள்ளார்.


Click it and Unblock the Notifications