Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மா அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார்.. பங்கமாக கலாய்த்த பாகிஸ்தான் வீரர்.. உண்மை தானோ?

லாகூர் : இந்திய அணியில் நடைபெறும் விஷயங்கள் எல்லாம் புரிந்து கொள்ளவே முடியாதபடி குழப்பமாக இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் இந்திய வீரர் மட்டும்தான் ஒரு வீரர் இரட்டை சதம் அடித்த பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து நீக்கப்படுவார் என்று குறிப்பிட்டார்.

Pakistan ex cricketer salman butt accuses indian team to chopping the players

மேலும் பேசிய அவர் இது போல் செய்வதால் என்ன பயன் இருக்கின்றது. ஒரு இன்னிங்ஸில் ஆயிரம் ரன்கள் அடித்தால் கூட அந்த வீரரை இரண்டாம் தர வாய்ப்பாக தான் இந்திய நிர்வாகம் கருதுகிறது. நீங்கள் சிறந்த வீரர் என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். நாம் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் நமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற ஒரு உணர்வையே நமக்கு இல்லாமல் ஆக்கி விடுவார்கள்.

இதனால் நாம் எப்படி விளையாடினாலும் சரி நீங்கள் இரண்டாம் பட்சம் தான் என்று நினைப்புதான் வரும் ரோகித் சர்மா. இன்னும் அணிக்கு வந்த புதிய வீரர் போல் செயல்பட கூடாது. அவர் இப்போது உலக கிரிக்கெட்டில் தனக்கென ஒரு பெயரை பிடித்து இருக்கிறார். ஆனால் இத்தனை காலமாக விளையாடும் வீரர்கள் ஆட்டத்தில் விளையாடும் போது நெருக்கடியை சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஆனால் ரோகித் சர்மா போன்ற வீரர்கள் எல்லாம் நாக்கவுட் போட்டிகளில் நெருக்கடியான கட்டத்தில் ஆட்டம் இழந்து விடுகிறார்கள். இது குறித்து இந்திய அணி நிர்வாகம் யோசிக்க வேண்டும் என்று சல்மான் பட் கூறியுள்ளார். ரோகித் சர்மா ஐபிஎல் மற்றும் டி20 உலக கோப்பை அரை இறுதி ஆட்டங்களில் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டம் இழந்ததையே மறைமுகமாக சல்மான் பட் விமர்சித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா ஐந்து சதங்களை அடித்து சாதனை படைத்தார். இதன் மூலம் அந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என பெருமையைப் பெற்றார்.இதை போன்று ஒரு சாதனையை ரோகித் சர்மா நிலை நிறுத்துவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

Story first published: Saturday, August 5, 2023, 15:56 [IST]
Other articles published on Aug 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+