Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூர்யகுமார் யாதவ் மீண்டு வர என்ன வழி.. பாக். வீரர் சொன்ன சூப்பர் யோசனை.. சரிப்பட்டு வருமா?

மும்பை : இந்திய கிரிக்கெட்டில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வீரர் ரசிகர்களிடம் சிக்கிக் கொண்டு வருகிறார்கள். கடந்த மாதம் கே எல் ராகுல் சரியாக விளையாடாமல் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதன் பிறகு ஒரு நாள் தொடரில் தன்னுடைய பார்மை நிரூபித்து கே எல் ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விக்கெட் கீப்பராக இடம்பெற வேண்டும் என பலரும் கோரிக்கை விடுக்கும் அளவிற்கு தன்னுடைய திறமையை நிரூபித்து விட்டார்.

இந்த நிலையில் சூரியகுமார் யாதவும் தற்போது ஒரு நாள் கிரிக்கெட்டில் மோசமாக விளையாடி வருகிறார்.

மோசமான ஆட்டம்

மோசமான ஆட்டம்

21 இன்னிங்ஸில் விளையாடியுள்ள சூரியகுமார் யாதவ், இதுவரை இரண்டு முறை அரைசதம் அடித்திருக்கிறார். அத்துடன் இல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் தொடரிலும் தொடர்ந்து கோல்டன் டக் ஆகி ரசிகர்களை விரக்தியில் ஆழ்த்தி இருக்கிறார். சூரியகுமார் போன்ற அதிரடி வீரர் உலகக் கோப்பை அணியில் தேவை என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ரசிகர்களின் ஆசையில் சூரிய குமார் கபடி விளையாடிவிட்டு சென்றுவிட்டார்.

கவலை தான்

கவலை தான்

தற்போது ஐபிஎல் தொடருக்கு சூரியகுமார் யாதவ் தயாராகி வருகிறார். இதில் அவர் தனது பார்மை நிரூபிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் சல்மான் பட் சூரிய குமார் யாதவுக்கு ஒரு யோசனையை குறிப்பிட்டு இருக்கிறார். அதில் ஒரு வீரர் தொடர்ந்து பத்து இன்னிங்ஸில் சரியாக விளையாடாமல் சொற்ப ரன்களில் ஆட்டம் இழப்பது நிச்சயமாக கவலை அளிக்கும் விஷயமாகத்தான் இருக்கும்.

வாய்ப்பு கொடுங்கள்

வாய்ப்பு கொடுங்கள்

சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி இருந்தாலும் அவர் திறமை வாய்ந்த வீரராக நிரூபிக்கப்பட்டாலும் நிச்சயமாக அவரை அணியிலிருந்து நீக்கிவிடக்கூடாது. அதற்கு மாற்றாக சம்பந்தப்பட்ட வீரரை உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வைக்க வேண்டும்.

 மீண்டு வருவார்

மீண்டு வருவார்

இதன் மூலம் அவருக்கு சுவாசிக்கு கொஞ்சம் நேரம் கிடைக்கும். உள்ளூர் போட்டிகளில் விளையாடிவிட்டு மீண்டும் அவர் வெற்றிகரமான வீரராக அணிக்குள் வர வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்று தொடர்ந்து ஒரு வீரர் தோல்வியை தழுவினால் அவருக்கு நிச்சயமாக கடும் நெருக்கடி ஏற்படும். அந்த அழுத்தத்திலிருந்து அவரை விடுவிக்க வேண்டும் என்றால் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் விளையாட வைப்பது சிறந்தது என சல்மான் பட் கூறியிருக்கிறார்.

Story first published: Friday, March 24, 2023, 19:13 [IST]
Other articles published on Mar 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+