Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எலான் மஸ்கின் ரூல்ஸ்.. பாக். வீரரை வசமாக சிக்க வைத்த நெட்டிசன்கள்.. ஆள விடுங்க டா சாமி என விளக்கம்

மும்பை : இந்திய ரசிகர்களிடம் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரை வசமாக சில நிட்டிசன்கள் சிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் ட்விட்டரில் பல அதிகாரபூர்வ விஷயங்களுக்கு பயன்படுத்தப்படும்.

ஏதேனும் நட்சத்திரங்கள் ஏதேனும் விஷயங்களை தெரிவிக்க வேண்டும் என்றால் ட்விட்டர் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவார்கள். இதில் உண்மை கணக்கு எது? போலி கணக்கு எது என்பதை தெரிந்து கொள்ள ப்ளூ டிக் பயன்படுத்தப்படும்.

Pakistan EX star cricketer ifthikar ahmed affected by imposter in twitter

இந்த நிலையில் தற்போது காசு கட்டினால் யாருக்கு வேண்டுமானாலும் ப்ளூ டிக் கிடைக்கும் என்று எலான் மஸ்க் விதிகளை மாற்றி அமைத்து விட்டார். இதன் மூலம் தற்போது பாகிஸ்தான் வீரர் ஒருவர் சிக்கி இருக்கிறார். அதன்படி பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இப்திகார் அஹமத் பெயரில் போலி கணக்கை தொடங்கி அதில் ப்ளூ டிக் காசு கொடுத்து வாங்கி இருக்கிறார்கள்.

அதில் நாங்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போதெல்லாம் தெருவில் விளையாடும் குழந்தைகளுக்கு எதிராக செயல்படுவது போல் தான் இருக்கும் என்று அவர் கூறியது போல் போலி கணக்கில் இருந்து பதிவு ஒன்றை சிலர் விஷமத்தனமாக போட்டு விட்டார்கள். இதனை அடுத்து பலரும் இப்திகார் அகமதை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்கள். இதனால் அலறி அடித்துக் கொண்டு தற்போது இப்திகார் அஹமத், ஒரு விளக்கத்தை அளித்திருக்கிறார்.

அதில் நான் சொல்லாத ஒரு விஷயத்தை சொன்னது போல் சில விஷமிகள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருப்பது குறித்து நான் கேள்விப்பட்டேன். இப்படி ஒரு கருத்தை எந்த ஒரு தொழில் முறை கிரிக்கெட் வீரரும் வெளியிட மாட்டார். இது போன்ற பொய் செய்தியை முதலில் பரப்புவதை நிறுத்துங்கள். நான் உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கின்றேன்.இது போன்ற போலி மற்றும் வெறுப்பு பிரச்சாரத்தை பரப்புவார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது போன்ற பல விஷயங்கள் ப்ளூ டிக்ஐ பயன்படுத்தி சிலர் செய்வதாக இப்திகார் அஹமது கூறியுள்ளார். பாகிஸ்தான் வீரர் பெயரில் போலி கணக்கை பயன்படுத்தி இவ்வாறு இந்தியாவுக்கு எதிராக பேசுவது போல் பதிவிட்டு இருநாட்டு ரசிகர்கள் இடையே பிரச்சனையை சிலர் ஏற்படுத்தி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

Story first published: Thursday, August 17, 2023, 20:21 [IST]
Other articles published on Aug 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+