பாகிஸ்தானுக்கு ஆப்பு வைத்த ஐசிசி.. செமி ஃபைனலயா இப்படி நடக்கனும்.. ரசிகர்கள் கவலை - என்ன காரணம்?
சிட்னி: நியூசிலாந்து அணியுடனான அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு புதிய சிக்கலை உண்டாக்கியுள்ளது ஐசிசி.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்று நாளை முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி சிட்னியில் நடைபெறவுள்ளது.
இதே போல நவம்பர் 10ம் தேதி நடைபெறும் 2வது ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றது. இந்த போட்டி அடிலெய்டில் உள்ள மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

அரையிறுதிப்போட்டி
இந்த இரண்டு போட்டிகளுக்கான நடுவர்களை ஐசிசி சமீபத்தில் அறிவித்தது. அதன்படி பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டிக்கு மராயிஸ் எராஸ்மஸ் மற்றும் ரிச்சர் இல்லிங்வொர்த் ஆகியோர்கள் நடுவர்களாகவும் ரிச்சர்ட் கெட்டில்போரோ, மைக்கேல் காஃப் ஆகியோர் 3வது மற்றும் 4வது நடுவர்களாக செயல்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு பிரச்சினை
இந்நிலையில் இதனை கேட்ட பாகிஸ்தான் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதற்கு காரணம் அம்பயர் மராயிஸ் எராஸ்மஸ் தான். நடப்பு உலகக்கோப்பை தொடரில் தொடக்கத்தில் இருந்தே சர்ச்சையான முடிவுகளை கொடுத்து வருபவர் இவர் தான். இந்தியாவுடனான போட்டியில் கடைசி ஓவரில் கோலி கேட்டவுடன் முகமது நவாஸுக்கு நோ பால் கொடுத்தவர் இவர் தான். இவர் அதனை கொடுக்கவில்லை என்றால் பாகிஸ்தான் வென்றிருக்கும்.

மறைமுக குடைச்சல்
இதே போல இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போதும் கோலியின் பேட்டிங்கில் நோ பால் கொடுத்திருந்தார். மேலும் மழைபொழிவு நிற்பதற்கு முன்னதாகவே போட்டியை தொடங்கியதால் வீரர்கள் வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கு சிரமமானதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த போட்டியில் வெற்றிக்கு அருகில் சென்ற வங்கதேசம் தோல்வியடைந்ததால், பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு அப்போது கேள்விக்குறியாகியிருந்தது.

ரசிகர்களின் கவலை
இப்படி பாகிஸ்தான் அணிக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேண்டப்படாதவராக இருக்கிறார் இந்த எராஸ்மஸ். கடந்த காலங்களிலும் பாகிஸ்தான் அணிக்கு சர்ச்சை முடிவுகளை கொடுத்துள்ளார். எனவே அரையிறுதிப்போட்டிக்கு வருவதால் பாகிஸ்தான் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications