Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த வார்த்தை.. சுப்மன் கில்லை குறி வைத்து கிண்டல்.. முகம் சுளிக்க வைத்த பாக். ரசிகர்கள்

இந்தூர் : இந்திய அணியின் துவக்க வீரர் சுப்மன் கில்லை குறி வைத்து பாகிஸ்தான் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

அவர் இந்த ஆண்டு ஒருநாள் போட்டியில் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். ஒரே ஆண்டில் 5 சதம், 5 அரைசதம் அடித்து இருக்கிறார். இன்னும் இந்த ஆண்டு பல ஒருநாள் போட்டிகளில் அவர் ஆட இருப்பதால் பல்வேறு சாதனைகளை அவர் முறியடிப்பார் என கூறப்படுகிறது.

Pakistan fans says Shubman Gill is Road prince after India vs Australia 2nd ODI

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் அதிரடி சதம் அடித்தார். அப்போது அவர் ஐசிசி ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தை பிடிப்பார் என கூறப்பட்டது.

அப்போது இருந்தே பாகிஸ்தான் ரசிகர்கள் பலர் இணையத்தில் சுப்மன் கில்-ஐ "ரோடு பிரின்ஸ்" - ("தார் சாலை இளவரசர்") என்ற வார்த்தையை பயன்படுத்தி கிண்டல் செய்யத் துவங்கினர்.

Pakistan fans says Shubman Gill is Road prince after India vs Australia 2nd ODI

அதாவது சுப்மன் கில் கடினமான பிட்ச்களில் ரன் குவிப்பதில்லை. மாறாக, தட்டையாக இருக்கும் பிட்ச்களில் எளிதாக ரன் குவிக்க முடியும் என்பதால் அது போன்ற பிட்ச்களில் மட்டுமே அவர் ரன் குவிக்கிறார் என அவர்கள் கூறி வருகின்றனர். இப்படி ரன் குவித்து அவர் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து விடுவார் என அவர்கள் கருதுகின்றனர்.

சுப்மன் கில் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தால் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு என்ன பிரச்சனை?

Pakistan fans says Shubman Gill is Road prince after India vs Australia 2nd ODI

அங்குதான் சிக்கல் உள்ளது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார். தற்போது சுப்மன் கில் தொடர்ந்து அதிரடியாக ரன் குவித்து வருவதால் அவர் பாபர் ஆசாமின் முதல் இடத்தை தட்டிப் பறிப்பார் என கூறப்படுகிறது.

35 ஒருநாள் போட்டிகளில் 1917 ரன்கள் குவித்துள்ள சுப்மன் கில்லின் ஒருநாள் போட்டி பேட்டிங் சராசரி 66.10ஆகும். இந்த ஆண்டில் மட்டும் அவர் 20 போட்டிகளில் 1230 ரன்கள் குவித்துள்ளார். ஐந்து சதம், ஐந்து அரைசதம் என தனது சிறந்த ஃபார்மில் இருக்கிறார்.

Pakistan fans says Shubman Gill is Road prince after India vs Australia 2nd ODI

உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாகவே சுப்மன் கில் ஐசிசி ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து விடுவார். அதனால், அவரை ரோடு பிரின்ஸ் என கிண்டல் செய்துள்ள சில ட்விட்டர் பதிவுகளை நீங்களே பாருங்கள்.

ரோடு பிரின்ஸ் என்ற பைக்கின் படத்தோடு, சுப்மன் கில் படத்தை வைத்து இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என பலர் கேலி செய்துள்ளனர் இந்த பதிவில் ஒருவர், அந்த பைக் மற்றும் கில் என இருவரையும் பாராட்டுகிறேன் என கூறி அவரை அந்த பைக்குடன் ஒப்பிட்டு இருக்கிறார்;

Pakistan fans says Shubman Gill is Road prince after India vs Australia 2nd ODI

மற்றொரு பாகிஸ்தான் ரசிகர், 2021இல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக கடினமான பந்துவீச்சாளர்களை எதிர்த்து சதம் அடித்து நம்பர் 1 இடத்தை பிடித்தார். ஆனால், தார் சாலையில் சதம் அடித்த சுப்மன் கில்லும் நம்பர் 1 இடத்தை பிடிக்க வருகிறார் என கூறி இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த இரண்டாவது போட்டி இந்தூர் மைதானத்தில் நடந்தது. அந்த மைதானம் மிகவும் சிறிய பவுண்டரியை (60 மீட்டர்) கொண்டது. அதை கிண்டல் செய்து, 50 மீட்டரில் சிக்ஸ் அடித்த ரோடு பிரின்ஸ்-க்கு வாழ்த்துக்கள் என கூறி அவர் சாலையில் ஆடுவது போன்ற படத்தை பகிர்ந்துள்ளார்.

மற்றொருவர், சுப்மன் கில் தார் சாலை போன்ற பிட்ச்சில் சிறிய பவுண்டரி இருக்கும் இடத்தில் தான் ரன் அடிப்பார் என கூறி இருக்கிறார்.

Pakistan fans says Shubman Gill is Road prince after India vs Australia 2nd ODI

தட்டையான ஆடுகளத்தை கண்டால் அடித்து துவைப்பார், புள்ளி விவரங்களுக்காகவே ஆடுவார், கத்துக்குட்டி அணிகளை கண்டால் விடமாட்டார், அதுதான் ரோடு பிரின்ஸ் சுப்மன் கில் என கூறி உள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சுப்மன் கில் அதிக சராசரி வைத்துள்ளதால், அவரை ஜிம்கில் என அழைத்து, அவர் இந்தியாவின் தார் சாலையில் விளையாடவே விரும்புவார் என கூறி இருக்கிறார்.

எனக்கு வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே ஆகிய அணிகளை கொடுங்கள் நான் அடித்து ஆடுவேன். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளை கண்டால் நான் ஓய்வு பெற்று விடுவேன் என சுப்மன் கில் கூறுவது போன்ற ஒரு மீம் இது.

Story first published: Monday, September 25, 2023, 9:55 [IST]
Other articles published on Sep 25, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+