இந்திய பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்ட பிரபல பாக். வீரர்... வைரல் போட்டோ...!!

துபாய்: பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி இந்திய பெண்ணான ஷாமிய அர்சூவை திருமணம் செய்திருக்கிறார்.

இந்திய பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் 4வது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி. ஜாஹீர் அபாஸ், மொஷின் கான், சோகிப் மாலிக் இவர்களைத் தொடர்ந்து தற்போது ஹசன் அலி இந்திய பெண்ணான ஷாமிய அர்சூவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஷாமிய அர்சூ ஹரியானாவில் உள்ள தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இங்கிலாந்தில் பொறியியல் படிப்பை முடித்த இவர் துபாயில் உள்ள தனியார் விமான நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். 25 வயதான பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி இதுவரை 53 ஒரு நாள் போட்டிகளிலும், 9 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.

துபாயில் நடைபெற்ற அவர்களின் திருமணத்திற்கு பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தலைமையில் பாகிஸ்தான் வீரர்கள் தீவிர பயிற்சி பெற்று வருவதால் திருமணத்தில் அவர்களால் கலந்து கொள்ளவில்லை.

பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் சோயிப் மாலிக் 2010ம் ஆண்டு இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் தற்போது ஹசன் இந்திய பெண் ஷாமிய அர்சூவை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர்களுக்கு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஹசன் அலி, ஷாமிய அர்சூ திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜாஹிர் அப்பாஸ், மொஷின் கான், சோகிப் மாலிக் உள்ளிட்டவர்களை தொடர்ந்து தற்போது ஹசன் அலியும் இந்திய பெண்ணை மணமுடித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Pakistan fast bowler hasan ali got married with indian girl shamia arzoo
Story first published: Wednesday, August 21, 2019, 18:08 [IST]
Other articles published on Aug 21, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X