Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி இல்லை.. சாம்பியன்ஸ் ட்ராபியில் வென்றோம்.. பட்டியலிடும் பாக். வீரர் ஹசன் அலி

இஸ்லாமாபாத் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 15 தொடங்க உள்ளது. இதில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே குரூப்பில் இருக்கின்றன.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி வரும் செப்டம்பர் 19 நடைபெற உள்ளது. அதன் மீது தான் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. யார் வெல்வார் எ

Pakistan fast bowler Hasan ali says without Kohli is advantage for pakistan

இந்த நிலையில், பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹசன் அலி இந்தியா உடனான ஆட்டம் மற்றும் விராட் கோலி இல்லாத இந்தியா பற்றி பேசியுள்ளார்.

ஹசன் அலி கூறுகையில், "விராட் கோலி ஒரு பெரும் சாதனையாளர். என் சீனியர். அவருடன் என்னை ஒப்பிட்டு பார்ப்பதை நான் விரும்பவில்லை. நான் எனது உடற்தகுதி மீதுதான் இப்போதைக்கு கவனம் செலுத்தி வருகிறேன்" என கூறினார்.

"விராட் கோலி இல்லாதது எங்களுக்கு சாதகமே. அவர் எந்த அழுத்தத்தையும் சமாளித்து ஆடுவார். அவரது இடத்திற்கு வரும் மற்றவர்கள் அதை செய்ய முடியாது" என கூறினார் ஹசன் அலி.

இந்தியா, பாகிஸ்தான் கடைசியாக சாம்பியன்ஸ் ட்ராபி இறுதியில் கடந்த ஆண்டு சந்தித்தது. அந்த போட்டியில் பாகிஸ்தான் வென்றது. அது தங்களுக்கு ஒரு முன்னிலையை கொடுத்திருப்பதாக கூறினார் ஹசன் அலி.

மேலும், ஐக்கிய அரபு நாட்டில் தாங்கள் அதிகம் விளையாடியதால், இது எங்கள் சொந்த மண் போல தான். இந்த சூழ்நிலைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என எங்களுக்கு தெரியும் என கூறினார் ஹசன் அலி.

Story first published: Friday, September 7, 2018, 18:59 [IST]
Other articles published on Sep 7, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+