Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷாகின் அப்ரிடிக்கு தீராத வயிற்று வலி.. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை.. என்ன நடந்தது ?

இஸ்லாமபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேக பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஷாகின் அப்ரிடி பாகிஸ்தான் நாட்டின் 2K கிட்சின் ஹீரோவாக திகழ்பவர். நமக்கு எல்லாம் சவீம் அக்ரம், சோயிப் அக்தர் எப்படி பரீட்சையமோ, அப்படி தான் இப்போது உள்ள தலைமுறைக்கு ஷாகின் அப்ரிடி

தனது அனல் பறக்கும் இன்ஸ்விங் யாக்கர் பந்துகளால் பேட்ஸ்மேன்களை நிலை குலைய வைத்தவர்.

ஷாகின் அப்ரிடி

ஷாகின் அப்ரிடி

வசீம் அக்ரம், வாக்கர் யூனிஸ் காலத்தில் கூட உலககோப்பையில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோற்றது இல்லை. ஆனால், ஷாகின் அப்ரிடி அந்த வரலாற்றை மாற்றி எழுதினார். டி20 உலககோப்பை கடந்த ஆண்டு நடைபெற்ற போது இந்திய அணி முதல் முறையாக தோல்வியை தழுவியது. இதில், இந்திய அணி தோற்றதுக்கு முக்கிய காரணம் ஷாகின் அப்ரிடி வீசிய 3 பந்துகள் தான்.

உடல் தகுதியை எட்டினார்

உடல் தகுதியை எட்டினார்

இந்த நிலையில் தான் ஷாகின் அப்ரிடி கடந்த ஆகஸ்ட் மாதம் காயத்தால் ஆசிய கோப்பை தொடரில் விளையாடாமல் விலகினார். இதனால் இந்தியாவுக்கு ஆபத்து இருக்காது என்று பலரும் கிண்டல் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஷாகின் அப்ரிடி டி20 உலககோப்பைக்குள் தயாராக வேண்டும் என்று காலத்துடன் போட்டி போட்டு, தனது உடல் தகுதியை எட்டி நான் வருவேன்னு எதிர்பார்க்கலல என்று பஞ்ச் டைலாக் பேசினார்.

11 விக்கெட்

11 விக்கெட்

ஆனால், விராட் கோலியின் ஸ்பெஷல் ஆட்டத்தால், டி20 உலககோப்பையில் ஷாகின் அப்ரிடியின் பந்துவீச்சு எடுபடவில்லை. ஆனால் முதல் மூன்று போட்டிகள் தனது இயல்பான பந்துவீச்சை வெளிப்படுத்த முடியாமல் திணற பாகிஸ்தான் அணியும் தடுமாறியது.எனினும் தனது நம்பிக்கையை கைவிடாமல் தொடர்ந்து பயிற்சி செய்த ஷாகின் அப்ரிடி டி20 உலக கோப்பையில் 11 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

வயிற்று வலி

வயிற்று வலி

அப்ரிடி இறுதிப் போட்டியில் விளையாடும் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் 2 ஓவர் தான் வீச முடிந்தது. பாகிஸ்தான் தோல்விக்கு இது தான் காரணம் என்று பேசப்பட்டது. இந்த நிலையில அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில், காலில் காயம் பெரிய அளவில் இல்லை என்றும், 2 வாரம் ஓய்வு எடுத்தால் போதும் என்று மருத்துவர்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு வந்த ஷாகின் அப்ரிடிக்கு திடீரென்று தீவிர வயிற்று வலி ஏற்பட்டு இருக்கிறது.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாயின் அப்ரிடிக்கு அப்பண்டிக்ஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ஷாகின் அப்ரிடி எனக்கு அறுவை சிகிச்சை வெற்றிக்கரமாக முடிவடைந்தது. எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறி, பதிவிட்டு இருந்தார். இதனால் ஷாகின் அப்ரிடி வரும் ஏப்ரல் மாதம் வரை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள பிஎஸ்எல் தொடரில் ஷாகின் ஆப்ரிடி பங்கேற்பது குறித்து அந்த அணி நிர்வாகம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று பாக். கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. எனினும் இறுதி முடிவு ஷாகின் ஆப்ரிடி கையில் உள்ளது.

Story first published: Monday, November 21, 2022, 18:23 [IST]
Other articles published on Nov 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+