பாகிஸ்தான் அணியில் ஒரு ஹர்திக் பாண்டியா.. இங்கிலாந்துக்கு எதிராக அசத்தல் பந்துவீச்சு.. முழு விவரம்
கராச்சி : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு ஆல்ரவுண்டர் தேவை என்று அந்நாட்டு விமர்சகர்கள் பல முறை பேட்டி அளித்துள்ளனர்.
Recommended Video
இந்த நிலையில் தான் அப்படி ஒரு ஆல்ரவுண்டரை இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி கண்டுபிடித்துள்ளது.
ஆனால், டி20 உலககோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் ரிசர்வ் வீரராக கூட அந்த பிளேயர் இல்லை என்பது தான் பெரிய காமெடி.

ஆமெர் ஜமால்
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் ஆமெர் ஜமால் என 26 வயதான வீரர் அறிமுகம் ஆனார். இவர் ஏற்னவே பல உள்ளூர் போட்டியில் பல அதிரடி ஆட்டங்களை பேட்டிங்கில் வெளிப்படுத்தி இருக்கிறார். பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் ஆமெர் ஜமால், பேட்டிங்கில் ஏழு பந்துக்கு 10 ரன்கள் அடித்தார்.

கடைசி ஓவர்
ஆனால் பந்துவீச்சுதான் நேற்று அவரை கதாநாயகன் ஆகிவிட்டது. தனது சர்வதேச முதல் ஓவரை ஆட்டத்தின் முக்கிய கட்டமான 15வது ஓவரில் வீசினார். வீசிய 2-வது பந்தில் விக்கெட் எடுத்த ஆமெர் ஜமால் . அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார். கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில், பந்து மீண்டும் இவரது கைக்கு வருகிறது,

பாகிஸ்தானுக்கு வெற்றி
மொயின் அலிக்கு தொடர்ந்து ஆஃப் சைடு யாக்கர்களை வீசினார் ஆமெர் ஜமால். இதனால் அந்த ஓவரில் ஒரு சிக்ஸரோடு சேர்த்தே வெறும் 8 ரன்கள் மட்டும் தான் விட்டு கொடுத்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்று, தொடரையும் 3க்கு2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

வாய்ப்பு கிடைக்குமா
ஆஸ்திரேலிய ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படும். ஆனால் பாகிஸ்தான் அணியோ சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களை அமைத்து, டி20 உலககோப்பைக்கு தயாராகி வருகிறது. இதே போன்று பாகிஸ்தான் அணியில் ஏதேனும் வீரருக்கு காயம் ஏற்பட்டால், ஆமெர் ஜமாலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications