Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது 2011 கிடையாது.. 1992 உலக கோப்பை மாதிரி இருக்கு.. அதே ட்விஸ்ட் உடன், இறுதிப் போட்டியில் பாக்.

சிட்னி : டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 1992 உலககோப்பையும் இதே மாதிரி சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது.

நியூசிலாந்தை அரையிறுதியில் வீழ்த்தி 13 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணி டி20 உலககோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.

பாகிஸ்தான் பாதை

பாகிஸ்தான் பாதை

அப்போது, இந்தியா, ஜிம்பாப்வே அணிகளிடம் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி தொடரை விட்டு வெளியேறி விட்டதாக அனைவரும் நினைத்தனர். ஆனால் அதன் பிறகு நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்தை பாகிஸ்தான் வீழ்த்தியது. அதன் பிறகு, தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து வீழ்த்தியதால் அரையிறுதி சுற்றுக்கு பாகிஸ்தான் அணி வந்தது.

2011 உலககோப்பை

2011 உலககோப்பை

இதனையடுத்து அரையிறுதியில் யாரும் எதிர்பாராத வகையில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை இந்த உலககோப்பைக்கும், 2011 உலககோப்பைக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்பட்டது. இரு தொடரிலும் ஒரே போன்ற சம்பவங்கள் நடந்ததாக ரசிகர்கள் கூறினர்.

1992 உலககோப்பை

1992 உலககோப்பை

தற்போது, பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இது 1992 உலககோப்பை போல் நடைபெறுவதாக அந்நாட்டு ரசிகர்கள் நம்புகின்றனர். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அந்த உலககோப்பையில், மற்ற அணிகளின் உதவியுடன் தான் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அப்போது இதே சிட்னி மைதானத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றது.

இறுதிப் போட்டிக்கு வருவது யார்?

இறுதிப் போட்டிக்கு வருவது யார்?

அப்போது மெல்போர்னில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டத்தை வென்றது. தற்போது, அரையிறுதியில் ஒரு வேளை இந்தியாவை இங்கிலாந்து அணி வீழ்த்தினால், அது 1992 உலககோப்பை மாதிரி இறுதியில் பாகிஸ்தானும், இங்கிலாந்தும் மோதும். அதுவே இந்தியா இறுதிப் போட்டிக்கு வந்தால் அது 2007 டி20 உலககோப்பை இறுதிப் போட்டி மாதிரி ஆகிவிடும்.தற்போது பாகிஸ்தான் பைனலுக்கு சென்றுவிட்டதால், இந்தியாவும் தகுதி பெற்றால் சரவெடி பட்டாசு தான்.

Story first published: Wednesday, November 9, 2022, 17:50 [IST]
Other articles published on Nov 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+