Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய பவுலர் கற்று தந்ததால் 936 விக்கெட் வீழ்த்தினேன்.. முன்னாள் பாக். கேப்டன் உருக்கம்

பிர்மிங்காம்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற போது, முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் முஸ்தாக் முகமத் நேரில் கண்டு களித்தார். 82 வயதான முஸ்தாக் முஹம்மத் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.

ஆறு வயது இருக்கும்போது குஜராத் மாநிலம் ஜூனாகர் பகுதியில் இருந்து பாகிஸ்தானுக்கு குடியேறி சென்றார். இதன் நினைவாக தனது டையில் இந்திய கொடியின் முத்திரையை அவர் வைத்திருந்தார். அப்போது செய்தியாளரிடம் பேசிய முஸ்தாக் முஹம்மத், ரிஷப் பண்டை வெகுவாக பாராட்டினார்.

Mushtaq Mohammed on Bedi

இது குறித்து பேசிய அவர் பண்டை பணத்தை பார்க்கும்போது எனக்கு ஷாகித் ஆப்ரிடி தான் ஞாபகத்துக்கு வருகிறார். எனவே பண்டை இந்தியாவின் ஆப்ரிடி என்று நான் கூறுவேன். இன்னும் சொல்லப்போனால் ஆப்ரிடியை விட இவர் சிறந்த முறையில் பேட்டிங் செய்கின்றார். விராட் கோலி நினைத்திருந்தால் இன்னும் இரண்டு ஆண்டுகள் கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருக்க முடியும்.

இந்த அணியில் நிச்சயமாக விராட் கோலி இருந்திருக்க வேண்டும். அவர் ஏன் தான் ஓய்வு பெற்றார் என்று எனக்குத் தெரியவில்லை என்று கூறினார். இந்தியாவில் பிறந்த ஊர் குறித்து பேசிய முஸ்தாக் முஹம்மத், நான் பிறந்து வளர்ந்த இடத்தை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கின்றது. ஒரு முறை இந்தியாவில் போட்டி ஒன்றில் பங்கேற்க அகமதாபாத் வரை சென்று இருந்தேன்.

என்னால் ஒரு ரயில் ஏறி நான் பிறந்த ஊருக்கு சென்றிருக்க முடியும். ஆனால் அட்டவணை மிகவும் நெருக்கடியாக இருந்ததால் என்னால் செல்ல முடியவில்லை. அதன்பிறகு என்னால் இந்தியாவே வர முடியவில்லை. எனக்கு இந்திய அணியின் பல வீரர்களுடன் நல்ல நட்பு இருக்கின்றது. நாங்கள் பலரும் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி இருக்கின்றோம்.

எனக்கு சுழற் பந்துவீச்சை கற்றுக் கொடுத்ததே பிசேன் சிங் பெடி தான் நான் நல்ல பேட்ஸ்மேன் ஆக இருந்தேன். ஆனால் பேடியால்தான் 936 விக்கெட் களை முதல் தர கிரிக்கெட்டில் எடுத்தேன். என்னுடைய ஆசை என்றால் இந்தியாவும் பாகிஸ்தானும் இருத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும். இது கிரிக்கெட்டில் மிகப்பெரிய போட்டியாகும். ஆனால் சோகமான சில காரணங்களால் இரு நாடுகளும் தற்போது விளையாடுவதில்லை என்று முஸ்தாக் முஹம்மத் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, July 8, 2025, 22:18 [IST]
Other articles published on Jul 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+