Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பஸ்ஸூக்கு அடியில் மிஸ்பா.. டீமை எடுத்த வக்கார் யூனிஸ்.. பாக். முன்னாள் கோச் விளாசல்!

அடிலெய்டு : பாகிஸ்தானில் வேகப்பந்து வீச்சாளர் இம்ரான்கான் ஜூனியரின் தேர்வு, தலைமை தேர்வாளரின் முடிவு என்றும் அதில் தான் தலையிடவில்லை என்றும் அந்நாட்டு பௌலிங் பயிற்சியாளர் கூறியுள்ளது குறித்து பாகிஸ்தான் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தான் பௌலிங் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் தலையீடு இல்லாமல் வீரர்கள் தேர்வு நடைபெற்றிருக்க முடியாது என்று தெரிவித்துள்ள ஆர்தர், தலைமை பயிற்சியாளர் மற்றும் தலைமை தேர்வாளர் மிஸ்பாவை பஸ்ஸூக்கு அடியில் தள்ளிவிட்டு, அவர் வீரர்கள் தேர்வை செய்திருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

பௌலிங் பயிற்சியாளரிடம் யோசனை கேட்காமல், பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் தேர்வை செய்திருப்பார் என்பது கேலிக்குரிய விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 பாகிஸ்தான் வீரர்கள் தேர்வு

பாகிஸ்தான் வீரர்கள் தேர்வு

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாசிற்கு பதிலாக இம்ரான்கான் ஜூனியர் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 ஆஸ்திரேலியாவிற்கு எதிராக களம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக களம்

பயிற்சி ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்ற இம்ரான் கான் ஜூனியர், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தேர்வு செய்யப்பட்டார்.

 தேர்வு குறித்து சர்ச்சை

தேர்வு குறித்து சர்ச்சை

பயிற்சி ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய இம்ரான் கான், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது திறனை வெளிப்படுத்த தவறிவிட்டார். இதையடுத்து அவரது தேர்வு குறித்து ரசிர்கள் மற்றும் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 பாகிஸ்தான் சொதப்பல்

பாகிஸ்தான் சொதப்பல்

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணிக்கு 580 ரன்களை வாரி கொடுத்தது. இதில் இம்ரான்கான் தனது பங்கிற்கு 73 ரன்களை அள்ளிக் கொடுத்து 1 விக்கெட்டை எடுத்தார்.

 எஸ்கேப் ஆன பௌலிங் பயிற்சியாளர்

எஸ்கேப் ஆன பௌலிங் பயிற்சியாளர்

இதனிடையே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் வீரர்களின் தேர்வில் தான் தலையிடவில்லை என்றும் அது தலைமை பயிற்சியாளர் மிஸ்பாவின் தன்னிச்சையான முடிவு என்றும் பௌலிங் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் தெரிவித்திருந்தார்.

 மிக்கி ஆர்தர் பதிலடி

மிக்கி ஆர்தர் பதிலடி

இதனிடையே வக்கார் யூனிசின் இந்த விளக்கம் கேலிக்குரியதாக உள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார். மிஸ்பாவை பேருந்துக்கு அடியில் தள்ளிவிட்டு, வீரர்களை அவர் தேர்வு செய்திருப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 முகமது அப்பாஸ் விளையாடி இருக்கவேண்டும்

முகமது அப்பாஸ் விளையாடி இருக்கவேண்டும்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முகமது அப்பாஸ் விளையாடியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள மிக்கி ஆர்தர், மிஸ்பா, பௌலிங் பயிற்சியாளர் வக்கார் யூனிசின் கருத்தை கேட்கவில்லை என்று கூறுவது நகைப்பிற்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

 வக்கார் யூனிஸ் விளக்கம்

வக்கார் யூனிஸ் விளக்கம்

இதனிடையே, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முகமது அப்பாஸ் விளையாடுவார் என்று வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, November 24, 2019, 17:12 [IST]
Other articles published on Nov 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+