போதை தலைக்கேறிய அப்ரிடி.. பாக். பிரதமர் அருகே உட்கார்ந்து செய்த செயலை பாருங்கள்
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி, பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு நாள் விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் வாயில் ஒரு பொருளை வைத்து மென்றார்.
அது ஒரு வகையான "நாஸ்வார்" எனப்படும் உலர் புகையிலை போதை வஸ்து என சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. அந்த விழாவில் பல ராணுவ அதிகாரிகள், அரசியல் பிரபலங்கள், சமீபத்தில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்ற இம்ரான் கான் என அனைவரும் இருந்தனர்.
அவர்கள் மத்தியில் அமர்ந்து இருந்த போதுதான், அப்ரிடி இந்த புகையிலை வஸ்துவை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். இதை அடுத்து பாகிஸ்தான் ட்விட்டர்வாசிகள் அப்ரிடியை கேலி செய்து வருகிறார்கள்.
என்ன அப்ரிடி அடக்க முடியலையா?
இவர், " என்ன அப்ரிடி, நாஸ்வார் சாப்பிடுவதை அடக்க முடியலையா? பாதுகாப்பு நாள் விழாவின் மிகப் பெரிய நகைச்சுவை இதுதான்" என கூறியுள்ளார்.
பூம் பூம் நாஸ்வார்
அப்ரிடிக்கு பூம் பூம் என்ற பெயர் உண்டு. அதே பெயரில் பபுள் கம் கூட உண்டு. இதோடு நாஸ்வார் புகையிலையையும் சேர்த்து "பூம் பூம் நாஸ்வார்" என மீம் போட்டு கலாய்த்து வருகிறார்கள். இவர் கேலியாக "அப்ரிடி சாப்பிடுவது பூம் பூம் பபுள் கம். அவரைப் பிடிக்காதவர்கள் அது நாஸ்வார் என கூறுவார்கள்" என கூறியுள்ளார்.
பிரதமர் பின்னாடி உட்கார்ந்து...
அப்ரிடி இந்த விழாவில், பிரதமர் இம்ரான் கான் பின் அமர்ந்து இந்த வஸ்துவை சாப்பிட்டார். அதை குறிப்பிடும் இவர், "சீரியசாவா அப்ரிடி? பிரதமர் மற்றும் ராணுவ அதிகாரிகள் பின்னாடி உட்கார்ந்து கொண்டா? அவர்கள் பேச்சையெல்லாம் உங்கள் நாஸ்வார் காலி பண்ணிவிட்டது.." என கூறியுள்ளார்.
அப்ரிடி நாஸ்வார்
இவர், " நிச்சயம் யாராவது "அப்ரிடி நாஸ்வார்" என ஒரு புகையிலையை வெளியிடுவார்கள்" என கேலி செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications