“அவர் சோலி முடிஞ்சது”.. இந்திய வீரரை வம்பிழுத்த பாக். முன்னாள் வீரர்.. ரசிகர்கள் அதிருப்தி!
மும்பை: ஹர்திக் பாண்ட்யா ஒரு போட்டிக்கு கூட தகுதி கிடையாது என்பது போல பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஒருவர் சாடியுள்ளார்.
இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக வலம் வந்துக்கொண்டிருந்த ஹர்திக் பாண்ட்யாவிற்கு தற்போது சோதனை காலமாக உள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு ஏற்பட்ட காயமானது இன்று வரை அவரை விளையாட அனுமதிக்காமல் இருந்து வருகிறது.

பாண்டாவின் சோக பகுதி
2018ம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரின் போது ஹர்திக் பாண்ட்யா, முதுகு பகுதி காயத்தால் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டார். அதன்பிறகு நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த பாண்ட்யா, சமீப காலமாக தான் விளையாடி வருகிறார். அதுவும் பவுலிங் செய்வது கிடையாது.

ஐபிஎல் போட்டி
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த 2 சீசன்களாக ஒரு ஓவரை கூட ஹர்திக் பாண்ட்யா வீசவில்லை. இதே போல இந்திய அணிக்கும் முழு நேர பேட்ஸ்மேனாகவே அவர் இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் கூட மொத்தமாக 4 ஓவர்களை மட்டுமே வீசினார். இதனால் அவர் மீதான நம்பிக்கை பலரிடம் போய்விட்டது. மும்பை அணியே அவரை மெகா ஏலத்தில் கழட்டிவிட்டுள்ளது.

பாகிஸ்தான் வீரர் கருத்து
இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவால் ஒரு வடிவ கிரிக்கெட்டில் கூட சரியாக ஆட முடியாது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ஹர்திக்கின் உடல் மிகவும் பலவீனமாக உள்ளது. அவரால் ஒரு வடிவ கிரிக்கெட்டில் கூட சரியாக ஆட முடியாது. அவர் கொஞ்சம் உடலை ஏற்ற வேண்டும். சரியான டையட்டை கடைபிடிக்க வேண்டும் அதற்கான நேரத்தை எடுத்துக்கொண்ட பிறகு தான் கம்பேக் கொடுக்க முடியும் எனத்தெரிவித்துள்ளார்.
Recommended Video

கம்பேக்
ஹர்திக் பாண்ட்யா தற்போது பெங்களூருவில் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்திய அணியின் அடுத்த சில தொடர்களில் இருந்து அவர் வெளியேறியிருக்கிறார். அடுத்து வரும் ஐபிஎல் தொடரில் அகமதாபாத் அணியில் ஒப்பந்தமானதாக கூறப்படும் பாண்ட்யா தரமான கம்பேக் கொடுப்பார் எனத்தெரிகிறது.


Click it and Unblock the Notifications