கென்ய பவுலிங்கை சமாளித்து 317 ரன்களைக் குவித்தது பாக்
ஹம்பந்தோட்டா: உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இன்று பாகிஸ்தானும், கென்யாவும் மோதின. கென்ய அணியின் அபாரமான பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கால் பாகிஸ்தான் ரன் குவிக்க முடியாமல் தடுமாறி பின்னர் மீண்டு 7 விக்கெட் இழப்புக்கு 317 ரன்களைக் குவித்தது.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் அவ்வப்போது ஏதாவது ஆச்சரியம் நடைபெறுவது வழக்கம். குட்டி அணிகளை, பெரிய அணிகள் குண்டக்க மண்டக்க தோற்கடிக்கும் அல்லது பெரிய அணிகளை சிறிய அணிகள் பந்தாடி வெல்லும். இந்த உலகக் கோப்பைப் போட்டியிலும் அது ஏகபோகமாக நடந்து வருகிறது.
சாம்பியன் அணியான ஆஸ்திரேலியாவை பந்து வீச்சில் மிரட்டியது ஜிம்பாப்வே. ஆனால் பேட்டிங்கில் சொதப்பியதால் ஆஸ்திரேலியா தப்பியது.
அதேபோல நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து அணியை தனது அபாரமான பேட்டிங்கால் புரட்டிப் போட்டு விட்டது நெதர்லாந்து. மிகப் பெரிய அணிகள் குவிப்பது போல ரன்களைப் போட்டுத்தாக்கியதால் இங்கிலாந்து அரண்டு போனது. இருப்பினும் நெதர்லாந்தின் பந்து வீச்சு சற்று பலவீனமாக இருந்ததால் தோல்வி என்ற அவமானத்திலிருந்து தப்பிப் பிழைத்தது இங்கிலாந்து.
இந்த வரிசையில் இன்று கென்யாவும், பாகிஸ்தானும் மோதின. ஆஸ்திரேலியா, இங்கிலாந்தைப் போல, பாகிஸ்தானும், குட்டி அணியான கென்யாவிடம் தடுமாறியது. இருப்பினும் பின்னர் சுதாரித்த பாகிஸ்தான் சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்து தப்பியது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களான முகம்மது ஹபீஸும், அகமது ஷசாத்தும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து விட்டனர்.
முகம்மது ஹபீஸ் 9, அகமது சஷாத் 1 எடுத்தனர். கம்ரன் அக்மல் சிறப்பாக ஆடி 55 ரன்களைக் குவித்தார். அதேபோல யூனிஸ்கான் 50 ரன்களைப் போட, மிஸ்பா உல் ஹக் வான வேடிக்கை காட்டி 65 ரன்களைக் குவித்தார்.
இவர்களை விட சிறப்பான ஆட்டத்தைக் கொடுத்தவர் உமர் அக்மல்தான். 52 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 71 ரன்களைக் குவித்து பாகிஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்டார்.
இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்த பாகிஸ்தான் 317 ரன்களைக் குவித்தது.
கென்ய தரப்பில் தாமஸ் ஒடாயோ 3 விக்கெட்களைச் சாய்த்தார். ஒடியானோ, கோச்சே, கமாண்டே, டிகோலோ ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த பாகிஸ்தான், இந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கு பெருத்த அவமானப் பின்னணியில்தான் வந்துள்ளது. பாகிஸ்தானில் நடப்பதாக இருந்த உலகக் கோப்பைப் போட்டிகள் அங்கிருந்து மாற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து ஊழல் சர்ச்சைகளில் பாகிஸ்தான் வீரர்கள் சிக்கினர்.
மேலும் இந்த அணியால் கோப்பையை வெல்ல முடியாது என்று பலரும் கணித்துள்ளனர். இப்படி பல பின்னடைவுகள் பின் தொடர்ந்து வரும் நிலையில், அதை அப்படியே துடைத்துப் போட்டு கோப்பையை வெல்வோம் என்ற உறுதியுடன் ஷாஹித் அப்ரிதி தலைமையிலான பாகிஸ்தான் அணியினர் இன்று தங்களது முதல் போட்டியில் கென்யாவை சந்தித்தது.
சென்னையில் நடந்த போட்டியில் நியூசிலாந்திடம் தாறுமாறாக அடி வாங்கி சுருண்டு தோற்றது கென்யா. இந்த தோல்வியிலிருந்து இன்னும் மீளாத அது தற்போது இலங்கையில் வைத்து பாகிஸ்தானை பயமுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளும் இதுவரை 5 முறை மோதியுள்ளன. அதில், அத்தனை முறையும் பாகிஸ்தானே வென்றுள்ளது.

Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011

Click it and Unblock the Notifications