Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட யாருப்பா இது? இன்சமாம் உல் ஹக்கை பார்க்கிற மாதிரி இருக்கு.. பட்டையை கிளப்பும் இளம் பாக். வீரர்

இஸ்லாமாபாத் : ஐபிஎல் தொடரை பார்த்து காப்பி அடிக்கப்பட்டு தொடங்கப்பட்ட பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடர் பல இளம் வீரர்களை அடையாளப்படுத்தி வருகிறது.

நடப்பு பி எஸ் எல் தொடரில் பாகிஸ்தான் இளம் வீரர் ஒருவர் அந்த அணியின் ஜாம்பவானான இன்சமாம் உல் ஹக்கை நினைவுப்படுத்துவது போல இருக்கிறார்.

பார்ப்பதற்கு இமயமலை போல் காட்சியளிக்கும் அசாம் கான், இன்சமாம் போல அதிரடியாக விளையாடி அசத்துகிறார்.

அதிரடி வீரர்

அதிரடி வீரர்

பிஎஸ்எல் தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடும் அசாம் கான், சில நாட்களுக்கு முன்பு ஒரு சம்பவம் செய்திருக்கிறார். கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிராக 202 ரன்கள் என்று இலக்கை துரத்தியபோது இஸ்லாமாபாத் அணி 69 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. அப்போது களத்துக்கு வந்த அசாம் கான் முஹம்மது அமீர், இமாத் வசீம், தாப்ரைசி சம்சி, ஆண்டிரூ டை என சர்வதேச பந்துவீச்சாளர்களை தனது பேட்டிங் மூலம் ஓட விட்டார்.

யார் அசாம் கான்?

யார் அசாம் கான்?

இவன் பந்தை எப்படி போட்டாலும் அடிக்கிறான் டா என்பதை போல் வீசிய பந்து எல்லாம் பவுண்டரி, சிக்சர் என விரட்டினார். இதன் மூலம் அசாம் கான் 41 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். இதில் எட்டு பவுண்டர்களும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும். இதனால் தோல்வி முகத்தில் இருந்த இஸ்லாமாபாத் அணி வெற்றி பெற்றது. இதேபோன்று கிளாடியேட்டர் அணி எதிர்த்து விளையாடிய அசாம் கான் 42 பந்துகளில் 97 ரன்கள் குவித்தார்.

மோயின் கான் மகன்

மோயின் கான் மகன்

இதில் எட்டு இமாலய சிக்சர்களும், ஒன்பது பவுண்டரிகளும் அடங்கும். இப்படி பட்டாசாக விளையாடும் அசாம் கான் விக்கெட் கீப்பராக இருக்கிறார். இவருடைய தந்தை யார் என்று கேட்டால் நீங்கள் ஷாக் ஆகிவிடுவீர்கள். பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மோயின் கானின் புதல்வன் தான் இவர். அசாம் கான் குறித்து பாராட்டியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர், அசாம் கான் பார்ப்பதற்கு பொறுப்பான வீரராக திகழ்கிறார். அதிரடியாக ஆடுவது மட்டுமல்லாமல் இன்னிங்சை கட்டமைத்து விளையாடுகிறார்.

பாராட்டு

பாராட்டு

அசாம் கான் விளையாடும் போது பார்வையாளர்களை தனது பேட்டிங் மூலம் கட்டிப்போட்டு விடுகிறார். இவர் சிறந்த கேப்டனாக வருவதற்கு அனைத்து தகுதியும் தெரிகிறது. வசீம் அக்ரம், வக்கார் யூனிஸ்,அப்ரிடி போன்ற வீரர்கள் எல்லாம் களத்தில் விளையாடும் போது ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விடுவார்கள். ஒரு ஸ்டார் வீரராக ஆக வேண்டும் என்றால் ஐசிசி விருதுகள் தேவையில்லை மக்களை கட்டி போட வேண்டும். அதுதான் ஒரு ஸ்டார் வீரனுக்கு தகுதி. எனக்கு தெரிந்து அசாம் கான் அந்தப் பணியை தான் செய்து வருகிறார் என்று சோயிப் அக்தர் பாராட்டியுள்ளார்.

Story first published: Monday, March 6, 2023, 16:16 [IST]
Other articles published on Mar 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+