Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே அடியாக காலில் விழுந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.. நாங்க அப்படி சொல்லவே இல்லை என விளக்கம்

லாகூர் : ஐசிசி உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பே பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சர்ச்சை ஒன்றில் சிக்கியது. ஹைதராபாத்தில் வந்து இறங்கிய பாகிஸ்தானுக்கு இந்திய ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜாகா அஷ்ரப் பாகிஸ்தான் அணி நமது எதிரி நாட்டுக்கு சென்று இருப்பதாக இந்தியாவை மறைமுகமாக தாக்கி பேசினார்.

Pakistan gives clarification on enemy nation remark despite getting great reception

இதற்கு இந்திய ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். பாகிஸ்தான் அணிக்கு உற்சாக வரவேற்பு அளித்த நிலையில் தங்களை அவமானப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடந்து கொள்வதாக ரசிகர்கள் கடுமையாக சாடினர். இது தொடர்பாக பிசிசிஐயும் தங்களது அதிருப்தியை தெரிவித்த இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

அதில் பாகிஸ்தான் அணிக்கு ஹைதராபாத் விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து பாராட்டி இருக்கிறது. அதில் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஹைதராபாத் விமான நிலையத்தில் கிடைத்த வரவேற்பு எந்த அளவுக்கு அன்பு மக்களிடையே இருக்கிறது என்பதை காட்டுகிறது. இது போன்ற வரவேற்பு அளித்த இந்தியர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவும், பாகிஸ்தானும் எப்போதெல்லாம் களத்தில் மோதுகிறார்களோ அவர்கள் சரியான போட்டியாளர்களை தவிர எதிரிகள் கிடையாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜாகா அஸ்ரப் குறிப்பிட்டு இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போது உலகத்தின் கவனமே இதில் தான் இருக்கும் என்றும் மற்ற போட்டிகளை விட இவ்விரு அணிகளும் மோதும் போதுதான் அதிக முக்கியத்துவத்தை பெறும் என்றும் தெரிவித்திருப்பதாக அந்த அணியில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் எதிரி நாடு என்று ஜாகா அஸ்ரப் பேசிய நிலையில் தற்போது அதற்கான விளக்கம் அளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, September 30, 2023, 23:32 [IST]
Other articles published on Sep 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+