Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பையில் இந்தியாவை ஓவர்டெக் செய்த பாகிஸ்தான்.. கூடுதல் சாதகமே அவங்களுக்கு தான்.. இதை பாருங்க

துபாய்: கிரிக்கெட்டிற்கு உலகிலேயே ஆசிய கண்டத்தில் தான் அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்த மேடையில் தான் யார் கிங் என்பது நிரூபிப்பது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய அணி ஆசிய கோப்பையை இதுவரை எட்டு முறை வென்று சாதனை படைத்திருக்கின்றது.

இந்த தருணத்தில் இந்தியாவை எப்படியாவது முந்த வேண்டும் என்று பாகிஸ்தான் பல்வேறு திட்டங்களை போட்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த தொடரில் இரு அணிகளும் அதிகபட்சம் மூன்று முறை மோத வாய்ப்பு இருக்கிறது.

India Pakistan

இந்தியாவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என பாகிஸ்தான அணி போட்ட பிளானால் அந்த அணிக்கு தற்போது கூடுதல் சாதகமான சூழல் நிலவுகிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம். தற்போது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடைபெறுகிறது. இங்கு உள்ள ஆடுகளங்கள் மிகவும் தோய்வாகவும் பேட்டிங்கிற்கு நெருக்கடியை கொடுக்கும் வகையிலும் இருக்கும்.

குறிப்பாக கிரிக்கெட்டில் எளிதில் எட்டக்கூடிய சாதாரண இலக்கு கூட இந்த ஆடுகளங்களில் சேஸ் செய்ய மிகவும் கடினமாக இருக்கும். இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கு முன்பு முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடி தற்போது கோப்பையையும் வென்றிருக்கிறது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் விளையாடிவிட்டது.

இதன் மூலம் இந்த ஆடுகளங்கள் எவ்வாறு செயல்படும் என்பதை பாகிஸ்தான் அணிக்கு நன்கு தெரிந்திருக்கும். அது மட்டுமல்லாமல் உலகின் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளர்களைக் கொண்ட ஆப்கானிஸ்தான் அணியை பாகிஸ்தான் பேட்டர்கள் எதிர்கொண்டு ரன்களை சேர்த்து இருப்பார்கள்.

இது அந்த அணிக்கு கூடுதல் சாதகத்தை தந்துள்ளது. ஆனால் இந்திய அணி சுமார் ஒரு மாத ஓய்வுக்கு பின் கிரிக்கெட் ககத்திற்கு திரும்புகிறது. அதிலும் பல வீரர்கள் கடைசியாக ஐபிஎல் தொடரில் தான் விளையாடி இருக்கிறார்கள். இதனால் எந்த வித தயாரிப்பும், பயிற்சியும் இன்றி ஆசிய கோப்பை தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அந்த வகையில் இரு அணிகளுக்கும் ஒப்பிட்டு பார்த்தால் பாகிஸ்தான் அணிக்கே சாதகமான சூழல் நிலவுகிறது.

எனினும் துபாய்க்கு ஒரு வாரத்திற்கு முன்பே வந்து இந்தியா பயிற்சியை தொடங்கிவிட்டது மேலும் லீச் சுற்றில் ஓமன் யுஏஇ ஆகிய அணைகளுக்கு எதிரான ஆட்டங்களில் இந்தியா விளையாடுவதால் அது ஒரு பயிற்சியாக வீரர்களுக்கு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது இதன் மூலம் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு செல்லும் முன்பு இந்திய அணி வீரர்கள் ஃபார்முக்கு திரும்பி விடுவார்கள் என நம்பலாம்.

Story first published: Monday, September 8, 2025, 9:00 [IST]
Other articles published on Sep 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+