Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை பைனலில் இந்தியாவை பழிவாங்குவோம்.. பாக். முன்னாள் வீரர்கள் சூளுரை

கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தினால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி விடலாம் என்ற வாய்ப்பு பாகிஸ்தானுக்கு இருக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான அணி சூப்பர் ஃபோர் சுற்றில் அடைந்த தோல்விக்கு இந்தியாவை பழி தீர்க்க வாய்ப்பு இருப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Pakistan having the chance to settle the score vs India in asia cup final

இது குறித்து பேட்டி அளித்துள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரர் மோயில் கான் இறுதிப்போட்டியில் நாம் மீண்டும் தகுதி பெற்று இந்தியாவை பழித்தீர்க்க நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதற்காக இலங்கைக்கு எதிராக நாம் சிறப்பாக விளையாட வேண்டும். ஏனெனில் இலங்கை பல முக்கிய பவுலர்களை இழந்தும் அபாயகரமான அணியாக விளங்குகிறது என்று கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் யுனிஸ்கான், பாகிஸ்தான் வீரர்களின் உடல் மொழி மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது. ஒரு அணியாக இந்தியாவுக்கு எதிராக அவர் சரியாக விளையாடவில்லை. ஆட்டம் முடிவதற்குள்ளேயே நமது வீரர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டனர் என்று கூறியுள்ளார்.

இதேபோன்று முஹமது ரிஸ்வான் அணி எந்த இடத்தில் விளையாட சொல்கிறதோ அந்த இடத்தில் தான் அவர் விளையாடு வேண்டுமே தவிர தாம் விரும்பும் இடத்தில் எல்லாம் விளையாட கூடாது என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் அணியில் தலைமை தேர்வுக்குழு உறுப்பினர் மோஷின் கான், மழை பெய்யப் போகிறது என்றால் டாஸ் வென்று இரண்டாவது பேட்டிங் செய்வது நல்ல முடிவாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஏனெனில் அப்போதுதான் எந்த இலக்கு நமக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிந்து நமது வீரர்களால் விளையாட முடியும் என்று அவர் கூறியுள்ளார்.இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்தியாவும் பாகிஸ்தானும் பைனலுக்கு செல்லும் என கணிக்கப்பட்டு இருந்தது. ஒருவேளை அப்படி நடந்தால் ரசிகர்களுக்கு மேலும் ஒரு பட்டாசான ஆட்டம் காத்திருக்கிறது. ஆனால் அதில் இந்தியாவை பழித்திருக்க பாகிஸ்தான் வீரர்கள் வெறியுடன் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, September 14, 2023, 22:27 [IST]
Other articles published on Sep 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+