மழை, வெயில்.. சினிமாவை மிஞ்சிய காலே டெஸ்ட்.. பாகிஸ்தான் புதிய சாதனை.. 408 பந்துகளை எதிர்கொண்ட ஷபிக்
காலே: இலங்கை, பாகிஸ்தானுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு அடுத்தடுத்து திருப்பங்களை எதிர்கொண்டு, ரசிகர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு சென்றது.
என்ன தான் டி20 கிரிக்கெட் வந்தாலும், டெஸ்ட் போட்டியில் இருக்கும் வெறித்தனமான டிவிஸ்ட்கள் வேறு எந்தப் போட்டியிலும் இல்லை.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இலங்கை அணியின் தொடக்க வீரர் மற்றும் கேப்டனான கருணரத்தினே ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார்.

சந்திமால் அசத்தல்
மற்றொரு தொடக்க வீரர் பெர்னான்டோ 35 ரன்கள் வெளியேற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்யூஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார். நட்சத்திர வீரர் மெண்டிஸ் தன் பங்கிற்கு 21ன்கள் சேர்த்தார். வழக்கம்போல் மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, சந்திமால் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 115 பந்துகளை எதிர் கொண்டு 76 ஆண்கள் எடுத்தார் . இதனால் ஸ்ரீலங்கா 222 ரன்களில் ஆட்டம் இழந்தது.

பாபர் அசாம் சதம்
இதனை அடுத்து பாகிஸ்தான அணி தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கியது. அப்துல்லா ஷபிக் ,இமாமுல் ஹக் ,அசார் அலி ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப பாகிஸ்தான அணி 24 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஒரு கட்டத்தில் 85 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் இழந்த நிலையில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் தனி ஆளாக நின்று போராடி சதம் விளாச பாகிஸ்தான் அணி 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இலங்கை 337
இதனையடுத்து 4 ரன்கள் முன்னிலை பெற்ற இலங்கை அணி 2வது இன்னிங்சில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர் பெர்னான்டோ 64 ரன்களும், குசேல் மெண்டிஸ் 76 ரன்களும், தினேஷ் சந்திமால் 96 ரன்களும் எடுக்க, இலங்கை அணி 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து 342 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் விளையாடியது.

தடுமாறிய நடுவரிசை
இதில் 22 வயதே வீரரான அப்துல்லா சஃபிக் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருமுனையில் அவர் நங்கூரம் போட்டு நிற்க, மறுமுனையில் இமார் உல் ஹக் 35 ரன்கள், அசார் அலி 6 ரன்களில் ஆட்டமிழக்க, முதல் இன்னிங்சில் சதம் விளாசிய பாபர் அசாம் 55 ரன்களில் வெளியேறினார். முகமது ரிஸ்வானும் 40 ரன்களில் வெளியேற, மீண்டும் பாகிஸ்தான் வெற்றி பெற போராடியது.

சஃபிக் சாதனை சதம்
அப்போது 22 வயதே வீரரான ஷபிக், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான 5வது நாள் ஆடுகளத்தில் பேட்டிங் செய்து சதம் விளாசினார். பாகிஸ்தான் வெற்றிக்கு 44 ரன்களுக்கு தேவைப்பட்ட நிலையில், இலங்கையின் வெற்றிக்கு 4 விக்கெட் தான் தேவைப்பட்டது. எனினும் பாகிஸ்தான் கீழ்வரிசை வீரர்களை ஷிஃபிக் அவர்களை பந்தை எதிர்கொள்ள விடாமல் காப்பாற்றினார்.

பாகிஸ்தான் ரெக்கார்ட்
இறுதியில் 11 ரன்கள் தேவைப்பட்ட போது மழை குறுக்கிட்டது. இதனால் பாகிஸ்தான் வெற்றி பறிபோய்விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், சில நேரத்திற்கு பின் போட்டி தொடங்கியது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டியது. தொடக்க வீரர் ஷபிஃக், 408 பந்துகளை எதிர்கொண்டு 160 ரன்கள் விளாசினார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 4வது இன்னிங்சில் 2வது அதிகபட்ச இலக்கை வெற்றிக்கரமாக துரத்திய அணி, காலேவில் அதிக இலக்கை வெற்றிக்கரமாக 4வது இன்னிங்சில் துரத்திய அணி என்ற சாதனையை படைத்தது.


Click it and Unblock the Notifications