Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இந்தியாவுக்கு பாகிஸ்தான் டீமை அனுப்ப முடியாது”.. ஆசிய கோப்பைக்கு முன் பாக். ஹாக்கி அமைப்பு கடிதம்

கராச்சி: இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் தங்கள் அணியை அனுப்புவது கடினம் என்று பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் (PHF) சர்வதேச ஹாக்கி சம்மேளனத்திடம் (FIH) தெரிவித்துள்ளது. வீரர்களின் பாதுகாப்பு குறித்த அச்சமே இதற்குக் காரணம் என்று அது கூறியுள்ளது.

பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் தாரிக் புக்தி இதுகுறித்து கூறுகையில், இந்தியாவிற்கு தங்கள் அணியை அனுப்புவதில் உள்ள தயக்கங்கள் குறித்து சர்வதேச ஹாக்கி சம்மேளனம் மற்றும் ஆசிய ஹாக்கி சம்மேளனத்திற்கு (AHF) கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்தார். "தற்போதைய சூழலில், எங்கள் அணி இந்தியாவில் விளையாடும்போது பாதுகாப்பு அபாயங்களைச் சந்திக்கும் என்று நாங்கள் தெரிவித்துள்ளோம்," என்று அவர் கூறினார். இதற்கு எந்த சமீபத்திய உதாரணமும் இல்லாத போதும் அவர் இவ்வாறு கூறி இருக்கிறார்.

Pakistan Hockey Team has reservations over coming to India to play Hockey Asia Cup 2025

இந்த ஆசிய கோப்பை, உலகக் கோப்பைக்கான நேரடித் தகுதிப் போட்டியாக இருப்பதால், இது ஒரு முக்கியமான தொடராகும். இருப்பினும், இந்தத் தொடருக்காக இந்தியாவிற்கு பயணம் செய்ய பாகிஸ்தான் வீரர்களும் ஆர்வம் காட்டவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். "இந்தியாவில் எங்கள் வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கும், போட்டியில் முழு கவனம் செலுத்துவதற்கும் என்ன உத்தரவாதம் இருக்கிறது என்பதைத் தெரிவிக்குமாறு நாங்கள் கேட்டுள்ளோம்," என்று புக்தி மேலும் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. ஆனாலும், பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு பயணம் செய்யாது என்று சமீபத்தில் ஒரு மூத்த அரசாங்க அதிகாரி கூறியிருந்தார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான அரசியல் பதட்டங்கள், இரு நாடுகளுக்கும் இடையேயான விளையாட்டு உறவுகளைப் பாதித்துள்ளது. குறிப்பாக, பகல்காம் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளுக்குப் பிறகு இந்த பதட்டங்கள் அதிகரித்துள்ளன.

இந்த சூழ்நிலை காரணமாக, போட்டியை மலேசியா அல்லது ஓமன் போன்ற ஒரு நடுநிலையான இடத்திற்கு மாற்ற பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் கோரிக்கை விடுக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முடிவு, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்கும் வாய்ப்பை பாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. முன்பு, ஹாக்கி உலகில் சக்திவாய்ந்த அணியாக இருந்த பாகிஸ்தான், தற்போது உலகத் தரவரிசையில் 15வது இடத்தில் உள்ளது.

Story first published: Monday, July 21, 2025, 14:10 [IST]
Other articles published on Jul 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+