Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை வெல்லப்போவது பாகிஸ்தான் தான்.. கவாஸ்கர் கண்டுபிடிப்பு.. அப்ப இந்தியா?

மும்பை : ஆசிய கோப்பைக்கு முன்னதாக எந்த அணி வெல்லும் என பல வகையான பேச்சுக்கள் இருக்கிறது.

பெரும்பாலும், இந்தியா அல்லது பாகிஸ்தான் தான் வெல்லும் என சொல்லி வருகின்றனர். மற்றவை அத்தனை வலுவான அணிகளாக இல்லை.

இந்த நிலையில் கவாஸ்கர் எழுதியுள்ள கட்டுரையில், பாகிஸ்தான் ஆசிய கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என தன் கருத்தை சொல்லி இருக்கிறார். இந்திய அணியை பற்றி அவர் எதுவுமே சொல்லவில்லை.

பாகிஸ்தானுக்கு அதிக வாய்ப்பு ஏன்?

பாகிஸ்தானுக்கு அதிக வாய்ப்பு ஏன்?

கவாஸ்கர் இப்படி சொல்ல முக்கிய காரணம் பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு நாட்டில் அதிக போட்டிகள் ஆடி வருகிறது. பாகிஸ்தானுக்கு மற்ற கிரிக்கெட் நாடுகள் வர தயங்குவதால், பாகிஸ்தான் ஆடும் போட்டிகள் பெரும்பாலும் ஐக்கிய அரபு நாட்டில் தான் நடக்கிறது. எனவே, சொந்த நாட்டு சூழ்நிலையில் ஆட உள்ள பாகிஸ்தான் ஆசிய கோப்பை தொடரை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என கூறி இருக்கிறார் அவர்.

பாகிஸ்தான் சாம்பியன்

பாகிஸ்தான் சாம்பியன்

பாகிஸ்தான் கடைசியாக பல நாடுகள் இணைந்து ஆடிய தொடரான சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. அதோடு அந்த அணி சரியான விகிதத்தில் வீரர்களை வைத்துள்ளது. இந்த காரணங்களாலும் அந்த அணி வெல்ல அதிக வாய்ப்புள்ளது என கூறியுள்ளார் கவாஸ்கர்.

இந்திய அணிக்கு வாய்ப்பில்லையா?

இந்திய அணிக்கு வாய்ப்பில்லையா?

கவாஸ்கர் ஏன் இந்திய அணியை பற்றி கூறவில்லை? இந்திய அணி வெற்றி பெற வாய்ப்புள்ளதா? இல்லையா? நாமே சிந்தித்து பார்த்தால் சில விஷயங்கள் இந்திய அணியில் சரியாக இல்லை தான். முதலில் ஒரு பேட்ஸ்மேனாக கோலி இந்தியாவின் அடிப்படை பலம். எப்படி சச்சின் ஒரு காலத்தில் இருந்தாரோ, அப்படி தான் இப்போது கோலி இருக்கிறார். தொடர்ந்து எல்லா போட்டிகளிலும் ரன் குவிக்கும் அவர் இல்லாமல் இருப்பது, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளில் பெரிய பின்னடைவாக இருக்கும்.

மற்றபடி இந்தியா எப்படி?

மற்றபடி இந்தியா எப்படி?

மற்றபடி இந்திய அணியில் சில விஷயங்கள் நம்மால் உறுதியாக சொல்ல முடியவில்லை. இந்திய அணியின் துவக்க வீரர்கள் தவான், ராகுல் இங்கிலாந்தில் தடுமாறியது, தோனி இங்கிலாந்தில் முக்கியமான நேரத்தில் பொறுமையாக ரன் சேர்த்தது, இந்திய அணியின் நிலையில்லாத நடு வரிசை பேட்ஸ்மேன்கள் என சில ஊசலாட்டங்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு போட்டியில் அனைவரும் சிறப்பாக ஆடி விட்டால் எல்லாமே சாதகமாக மாறி விடும் என்பதும் உண்மை.

Story first published: Saturday, September 15, 2018, 15:11 [IST]
Other articles published on Sep 15, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+