காலே: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் தருவாயில் இருக்கிறது. எனினும் அந்த அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்ததால் தோல்வி அடையவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் தனஞ்செய்யா டி சில்வா 122 ரன்கள் அடித்தார். இதன் மூலம் முதலில் இலங்கை அணி 312 ரன்களை குவித்தது.

இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஷகில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் பாகிஸ்தான அணி 461 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி தங்களது இரண்டாவது இன்னிங்சில் களம் இறங்கியது. இதில் தொடக்க வீரர் மதுசங்கா அரை சதமும் தனஞ்செய்யா டி சில்வா 82 ரன்களும் அடிக்க இலங்கையில் இரண்டாவது இன்னிங்ஸில் 279 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதை அடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷபிக் 8 ரன்களிலும், ஷான் மசூத் 7 ரன்களிலும், நோமன் அலி டக் அவுட்டாகி வெளியேறினர்.இதனால் பாகிஸ்தான் அணி நான்காவது நாள் ஆட்டநேரம் முடிவில் 48 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தற்போது இமாமுல் ஹக்கும் பாபர் அசாமும் களத்தில் இருக்கிறார்கள். பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு மேலும் 83 ரன்கள் தேவைப்படுகிறது.

இலங்கையில் வெற்றிக்கு கைவசம் ஏழு விக்கெட்டுகள் இருக்கிறது. பாகிஸ்தான் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்றாலும் அந்த அணியின் பேட்டிங்கை நாம் நம்ப முடியாது. இதனால் இலங்கை அணி நாளை அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினால் பெரும் பரபரப்பு ஏற்படும். 90 ஓவருக்கு மேல் இருப்பதால் நிச்சயம் ஒன்று பாகிஸ்தான் வெற்றி பெறும் இல்லையெனில் இலங்கை வெற்றி பெறும் என்ற நிலை மட்டுமே இருக்கிறது. பாபர் அசாம் களத்தில் இருப்பது கொஞ்சம் நம்பிக்கை தருகிறது.