Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சித்தப்பா மகன் பாபர் அசாமை பற்றி நான் அப்படி சொல்லலை.. முன்னாள் பாகிஸ்தான் வீரர் உமர் விளக்கம்

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் என்றாலே சர்ச்சைகளுக்குப் பஞ்சம் இருக்காது. தற்போது டி20 உலகக் கோப்பை தொடர் நடந்து வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரும், தனது சித்தப்பா மகனுமான பாபர் அசாம் குறித்து முன்னாள் வீரர் உமர் அக்மல் பகிர்ந்த பதிவு ஒன்று பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இது பாபர் அசாமை கேலி செய்வது போல் இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்தனர். இந்நிலையில், இந்தச் சர்ச்சை குறித்து உமர் அக்மல் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் உமர் அக்மல் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அதில் 2014 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் அணி 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, உமர் அக்மல் களமிறங்கி 54 பந்துகளில் 94 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெறச் செய்திருப்பார். அந்த இன்னிங்ஸையும், தற்போது நடந்து வரும் உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராகப் பாபர் அசாம் 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்துத் திணறியதையும் ஒப்பிட்டு அந்த வீடியோ இருந்தது.

Pakistan issue Umar Akmal Clarifies Controversial Post on Babar Azam Amid T20 World Cup 2026 Strike Rate Row

உமர் அக்மல் விளக்கம்

இது பாபர் அசாமை மட்டம் தட்டுவது போல் இருப்பதாகக் கூறி ரசிகர்கள் உமர் அக்மலை விமர்சித்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உமர் அக்மல் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், "பாபர் அசாமுடன் என்னை ஒப்பிட்டுப் பேசுவது எனது நோக்கமல்ல. அவர் தற்போது உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். அவருடைய சாதனைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மிடில் ஆர்டர் செட் ஆகாது

மேலும் அவர், "டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாம் மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்குவது அவருக்குச் செட் ஆகாது என்பதைச் சுட்டிக்காட்டவே அந்தப் பதிவைப் பகிர்ந்தேன். அந்த இடத்தில் விளையாடுவது அவருடைய இயல்பான ஆட்டத்திற்குப் பொருந்தாது. இது வெறும் பேட்டிங் வரிசை பற்றிய கருத்துதானே தவிர, ஒப்பீடு கிடையாது. இது ரசிகர் ஒருவர் எடிட் செய்த வீடியோ, அதை நான் அப்படியே பகிர்ந்தேன்" என்று விளக்கம் அளித்துள்ளார்.

பாபர் அசாமின் மோசமான சாதனை

இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்குப் பிறகு பாபர் அசாமின் ஸ்ட்ரைக் ரேட் 111.5 ஆகக் குறைந்துள்ளது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர்களில் மிகக் குறைவான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் வீரர் என்ற மோசமான சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக முகமது ஹபீஸ் மற்றும் குமார் சங்கக்கரா ஆகியோர் உள்ளனர்.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரிலும் பாபர் அசாம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. இதுவரை 4 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் வெறும் 91 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 22.75 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 112.34 ஆகவும் உள்ளது. பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்லத் திணறி வரும் நிலையில், பாபர் அசாமின் இந்த மோசமான ஃபார்ம் அந்த அணிக்குக் கூடுதல் பின்னடைவாக அமைந்துள்ளது.

Story first published: Saturday, February 28, 2026, 10:31 [IST]
Other articles published on Feb 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+