Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

45 சதம் எல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாது.. கோலி கொஞ்சம் கூட மாறல.. பாக். வீரர் பாராட்டு

கராச்சி : 2023 ஆம் ஆண்டு விராட் கோலி சிறப்பான முறையில் தொடங்கி இருக்கிறார். இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 87 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 113 ரன்கள் விளாசினார்.

இதில் 12 பவுண்டர்களும் ஒரு சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி தனது 45 வது சதத்தை பதிவு செய்திருக்கிறார்.

முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 49 சாதங்களுடன் உள்ளார் .இதனால் சச்சின் உடைய இந்த சாதனையை விராட் கோலி உடைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

யோசிக்க கூட முடியாது

யோசிக்க கூட முடியாது

விராட் கோலியின் இந்த சதத்தை இந்திய வீரர் கம்பீர் குறைவாக மதிப்பிட்டு விமர்சனம் செய்தார். சச்சின் காலத்தையும் விராட் கோலி காலத்தையும் ஒப்பிடாதீர்கள் என்று அவர் கூறினார். இந்த நிலையில் அண்டை நாடான பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் கோலி குறித்து பாராட்டி பேசி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், இந்த காலத்தில் எல்லாம் எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் ஒட்டுமொத்தமாக சர்வதேச அளவில் 45 சதங்களை அடிப்பதை எல்லாம் யோசித்துக் கூட பார்க்க முடியாது.

வாய்ப்பை பயன்படுத்தினார்

வாய்ப்பை பயன்படுத்தினார்

ஆனால் விராட் கோலி சர்வதேச அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே 45 சதத்தை அடித்திருக்கிறார். மேலும் சர்வதேச அளவில் 73 சதங்களை விராட் கோலி அடித்திருக்கிறார். விராட் கோலிக்கு இந்திய அணியில் இளம் வயதிலேயே வாய்ப்பு கிடைத்தது உண்மைதான் .ஆனால் அந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். விராட் கோலி இதே மைதானத்தில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சதம் அடித்திருக்கிறார்.

முக்கியமான வீரர்

முக்கியமான வீரர்

தற்போது அவருடைய பழைய பார்மை மீண்டும் சதம் அடித்தது மூலம் மீட்டு இருக்கிறார். உலகக்கோப்பை ,ஆசிய கோப்பை போன்ற பல அணிகள் பங்கேற்கும் தொடர்களில் விராட் கோலி எப்போதும் நன்றாகவே விளையாடி வருகிறார். விராட் கோலியின் ரன்கள் அடிக்கும் வேகம் வறண்டு போகவில்லை. இதுவே விராட் கோலி இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியமான வீரர் என்பதை கட்டுவதாக கம்ரான் அக்மல் பாராட்டியுள்ளார்.

மற்றொரு சாதனை

மற்றொரு சாதனை

இதனிடையே சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையான சொந்த மண்ணில் 20 சதம் அடித்ததை விராட் கோலி தற்போது சமன் செய்திருக்கிறார். எனினும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி 4 ரன்கள ஆட்டம் இழந்ததார். இதனால் இந்திய அணி சற்று நெருக்கடி சந்தித்தது. இதனிடையே மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.

Story first published: Thursday, January 12, 2023, 23:56 [IST]
Other articles published on Jan 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+