For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பும்ராவின் பந்துவீச்சை பின்பற்றும் 5 வயது பாகிஸ்தான் சிறுவன்.. அற்புதமான உணர்வு

Recommended Video

பும்ராவின் பந்துவீச்சை பின்பற்றும் 5 வயது பாகிஸ்தான் சிறுவன்- வீடியோ

மும்பை : இந்திய கிரிக்கெட்டின் முன்னணி பந்துவீச்சாளராக மாறி இருக்கும் பும்ராவின் பந்துவீச்சு முறை தனித்துவமானது.

அவரது பந்துவீச்சு முறையால் ஈர்க்கப்பட்ட 5 வயது பாகிஸ்தான் சிறுவன், அவரைப் போலவே ஓடி வந்து பந்து வீசும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

அந்த வீடியோவைப் பார்த்த பும்ரா, அதற்கு பதில் அளித்துள்ளார். தன் பந்துவீச்சை சிறுவர்கள் பின்பற்றுவது அற்புதமான உணர்வு என தெரிவித்துள்ளார்.

நம்பர் 1 பௌலர் பும்ரா

நம்பர் 1 பௌலர் பும்ரா

இந்திய அணியில் ஜஸ்ப்ரிட் பும்ரா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார் பும்ரா. அவரது பந்துவீசும் முறை வித்தியாசமானதாக உள்ளது.

சிறப்பான பும்ரா

சிறப்பான பும்ரா

இடையில் காயம் ஏற்பட்டு இங்கிலாந்து கிரிக்கெட் தொடரில் பல போட்டிகளில் இருந்து விலகி இருந்த பும்ரா கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பங்கேற்றார். மீண்டும் ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா 4 போட்டிகளில் 8 விக்கெட்கள் வீழ்த்தினார். ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தானை இரண்டு முறை வென்றது.

சிறுவன் வீடியோ

இந்நிலையில், ஆசிய கோப்பை போட்டிகளில் பும்ராவின் பந்துவீச்சை கண்ட ஐந்து வயது பாகிஸ்தான் சிறுவன், அதே போல் பந்து வீசி பயிற்சி செய்து வருகிறான். அந்த வீடியோவை ஒரு பாகிஸ்தானியர் பும்ராவுடன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அற்புதமான உணர்வு

அதைக் கண்ட பும்ரா அதற்கு பதில் அளித்துள்ளார். "நான் சிறுவனாக இருந்த போது எனக்கு பிடித்த கிரிக்கெட் நட்சத்திரங்களை போல நான் பந்து வீசினேன். இப்போது எனது முறையை சிறுவர்கள் பின்பற்றுவது அற்புதமான உணர்வு" என தன் பழைய ஞாபகங்களை நினைவு கூர்ந்துள்ளார்.

Story first published: Monday, October 22, 2018, 10:09 [IST]
Other articles published on Oct 22, 2018
English summary
Pakistan kid copying action of Bumrah video shared and Bumrah replied to the video.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X