Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அது எல்லாம் பொருட்டே இல்ல.. யார் பேச்சையும் கேட்காதீங்க.. பாக். வீரருக்கு சையது ஆஃபிரிடி அட்வைஸ்

பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வானுக்கு அந்நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான் சையது அப்ரிடி ஒரு முக்கிய அறிவுரையை தந்துள்ளார் .

டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் படுமோசமாக உள்ளது.கேப்டன் பாபர் அசாம் கூட தொடர்ந்து ரன்கள் சேர்க்கவில்லை.

பாகிஸ்தான அணி ஓரளவுக்கு வெற்றி பெறுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் முஹம்மது ரிஸ்வான் தான்.

பாக். ரசிகர்கள் விமர்சனம்

பாக். ரசிகர்கள் விமர்சனம்

முஹம்மது ரிஸ்வான் தொடர்ந்து ரன்களை தொடக்க வீரராக குவித்து வருகிறார். ஆனால் அதனை மற்ற வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள். ஆனால் முகமது ரிஸ்வானையே பலரும் விமர்சித்து வருகின்றனர்.முஹம்மது ரிஸ்வான் உடைய ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருப்பதாக பலரும் சாடி வருகின்றனர்.

நல்ல தொடக்கம்

நல்ல தொடக்கம்

இது நன்றாக விளையாடும் ஒரே வீரரையும் குறை சொல்லுகிறார்களே என்று மற்ற நாட்டு ரசிகர்கள் இடையே ஏற்படுத்துகிறது.இது குறித்து பேசிய பாகிஸ்தானியின் முன்னாள் ஜாம்பவான் சையது அப்ரிடி, நீங்கள் பந்து வீச்சோ இல்லை பேட்டிங்கோ நல்ல தொடக்கம் மிகவும் முக்கியம்.ரிஸ்வான் மற்றும் பாபர் இரண்டு பேருமே உங்களுக்கு நல்ல தொடக்கத்தை அளிக்கிறார்கள்.

அவசியம் இல்லை

அவசியம் இல்லை

ஆனால் இரண்டு பேரை வைத்து ஒரு அணியை உருவாக்க முடியாது .11 பேரும் விளையாட வேண்டும். 6 பேட்ஸ்மேன்கள் அணியில் இருக்கிறார்கள்.அதில் குறைந்த பட்சம் மூன்று வீரர்களாவது அணிக்கு ரன் சேர்க்க பங்களிப்பை கொடுக்க வேண்டும். ரிஸ்வான் அவருடைய திட்டத்தை மாற்ற எந்த தேவையும் இல்லை.அவர் யார் பேச்சையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

மற்றவர்கள் சரியில்லை

மற்றவர்கள் சரியில்லை

நடப்பாண்டில் மட்டும் ரிஸ்வான் 14 டி20 போட்டிகளில் 8 அரைசதம் அடித்திருக்கிறார். நேற்று நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கூட ரிஸ்வான் தனி ஆளாக நின்று 78 ரன்கள் அடித்தார். இதனால் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான், பாபர் ஆசாம் தவிர மற்ற வீரர்கள் சொதப்பி வருவது அந்த அணியின் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

Story first published: Saturday, October 8, 2022, 21:56 [IST]
Other articles published on Oct 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+