Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அது வேற வாய்.. இது வேற வாய்.. 6 மாதத்தில் இரண்டு முறை மாற்றி பேசிய பாகிஸ்தான் வீரர் அஃப்ரிடி

லாகூர்: அரசியல் பதற்றங்கள் காரணமாக, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக அந்நாட்டு அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இந்த முக்கிய முடிவைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனும், உலகப் புகழ் பெற்ற ஆல்ரவுண்டருமான ஷாஹித் அப்ரிடி, தனது மவுனத்தை கலைத்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை பாகிஸ்தான் வெல்வதற்கு முக்கியப் பங்காற்றிய அப்ரிடி, இந்தியாவின் பலத்திற்கு எதிரான இத்தகைய ஒரு போட்டி நடைபெறாதது வருந்தத்தக்கது என்று குறிப்பிட்டார். எனினும், தனது நாட்டின் அரசு எடுத்த இந்த முடிவுக்கு தான் முழு ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ( நடுநிலையானது மற்றும் அதன் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் நியாயமானது என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் சவால் விடுத்தார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசியல் கதவுகளை மூடும்போது, கிரிக்கெட் அவற்றை திறக்கும் என்று நான் எப்போதும் நம்பியிருக்கிறேன். டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் இந்தியாவுடன் விளையாடாதது வருந்தத்தக்கது.

இருப்பினும், எனது அரசாங்கத்தின் முடிவை நான் ஆதரிக்கிறேன். ஐ.சி.சிக்கு இது ஒரு முக்கியமான தருணம். வெறும் அறிக்கைகள் அல்லாமல், முடிவுகள் மூலம் அது நடுநிலையானது, சுதந்திரமானது மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நியாயமானது என்பதை நிரூபிக்க வேண்டும்," என்று பதிவிட்டுள்ளார்.1996 முதல் 2015 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணிக்காகப் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளித்த அப்ரிடியின் இப்போதைய கருத்து, அவர் முன்னர் வெளிப்படுத்திய நிலைப்பாட்டுடன் முரண்படுவதாக கிரிக்கெட் வட்டாரங்களில் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் போட்டியில் பாகிஸ்தான் லெஜண்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாடுவதை இந்தியா லெஜண்ட்ஸ் அணி புறக்கணித்தபோது, அரசியலையும் கிரிக்கெட்டையும் ஒருபோதும் கலக்கக் கூடாது என்று அப்ரிடி இந்தியாவை கடுமையாகக் கண்டித்திருந்தார்.

பாகிஸ்தான் அரசு எடுத்த இந்த சர்ச்சைக்குரிய முடிவால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், பாகிஸ்தான் அணியை சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இடைநீக்கம் செய்யக்கூடும் என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.சி.சி இந்த புறக்கணிப்பு நடவடிக்கைக்கு பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்கும் என்றும், அதன் விளைவாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நீக்கப்படும் அபாயமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒருவேளை பாகிஸ்தான் அணி 2026 டி20 உலகக் கோப்பையிலிருந்து முற்றிலுமாக வெளியேற்றப்பட்டால், அதற்குப் பதிலாக உகாண்டா அணி சேர்க்கப்படலாம். ஐ.சி.சி பாகிஸ்தானை இப்போட்டியில் பங்கேற்க அனுமதித்தாலும், அவர்கள் கடுமையான அபராதங்கள் மற்றும் பிற நிர்வாகத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Story first published: Monday, February 2, 2026, 20:51 [IST]
Other articles published on Feb 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+