For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன மருமகனை பார்த்து இப்படி சொல்லிட்டாரு? மாமனார் தந்த அட்வைஸ்.. பாக்.கிரிக்கெட்டில் ருசிகரம்

கொழும்பு : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சையது மகளை வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் ஆப்ரிடி இரண்டாவது முறையாக திருமணம் செய்ய இருக்கிறார்.

இந்த நிலையில் கிரிக்கெட் களத்தில் ஷாகின் அப்ரிடி எப்போதுமே சையது ஆப்ரிடி க்கு ஜூனியர் என்பதை நிரூபிக்கும் வகையில் தமது மருமகனாக ஷாயின் மாறினாலும் அவருக்கு அறிவுரை ஒன்றை வழங்கி இருக்கிறார்.

Pakistan Legend shahid afridi gives advice to his son in law shaheen afridi

அதாவது பாகிஸ்தான அணி வெற்றி பெற வேண்டும் என்றால் முதல் பவர் பிளேவில் ஷாகின் அப்ரிடி சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். ஆனால் அப்படி அவர் விக்கெட்டுகளை எடுக்க தவறி விட்டால் பாகிஸ்தான் அந்த போட்டியில் சம அடி வாங்குகிறது. சூப்பர் 4 ஆட்டத்தில் கூட இந்தியாவுக்கு எதிராக ஷாகின் ஆப்ரிடி 10 ஓவரில் 79 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

இதுவே இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் தனது மருமகன் ஷாகின் அப்ரிடிக்கு சையது ஆப்ரிடி அறிவுரை ஒன்றை வழங்கியிருக்கிறார். அதில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நான் பார்த்த வரையில் ஷாகின் ஆப்ரிடி ஆட்டத்தின் தொடக்கத்தில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றால் அவர் பொறுமையை இழந்து விடுகிறார்.

விக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்பதற்காக அவர் மீது அவரே கோபம் கொள்கிறார். இந்தியாவுக்கு எதிராக மட்டுமல்ல அவர் எப்போதுமே ஆட்டத்தின் தொடக்கத்தில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றால் கோபம் கொள்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் எப்போதுமே ஒரு பந்துவீச்சாளர் லைன் மற்றும் லென்தில் தான் கவனம் செலுத்த வேண்டும்.

அவர்கள் சரியான இடத்தில் பந்தை வீசினால் நிச்சயமாக விக்கெட் கிடைக்கும். ஷாகின் ஆப்ரிடி முன் இன்னும் நிறைய கிரிக்கெட் இருக்கிறது. அவர் நீண்ட நாட்கள் பாகிஸ்தானுக்காக விளையாட போகிறார். இந்த தருணத்தில் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது என்பதை அவர் துல்லியமாக திட்டமிட்டு அமைத்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் தோற்றாலும் வென்றாலும் அது பிரச்சினையே கிடையாது. ஆனால் ஒரு போட்டியை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள் என்பதை தான் அனைவரும் உற்று கவனிப்பார்கள். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தானின் அணுகுமுறை மிகவும் தவறாக இருந்தது என்று சையது ஆப்ரிடி கூறியுள்ளார்.

Story first published: Thursday, September 14, 2023, 23:27 [IST]
Other articles published on Sep 14, 2023
English summary
Pakistan Legend shahid afridi gives advice to his son in law shaheen afridi என்ன மருமகனை பார்த்து இப்படி சொல்லிட்டாரு? மாமனார் தந்த அட்வைஸ்.. பாக்.கிரிக்கெட்டில் ருசிகரம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+